Published:Updated:

விவசாயிகள் தற்கொலை, வீரர்கள் உயிரிழப்புக்கு காங்கிரசே காரணம்: மோடி

பரேலி: விவசாயிகள் தற்கொலைக்கும், ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கும் காங்கிரஸ்தான் காரணம் என மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பரேலியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்று  தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''மக்களின் அடிப்படை தேவைகளை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு ஏழைகள் மீது காங்கிரஸ் கரிசனம் காட்டி வருகிறது.

விவசாயத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எதுவும் செய்யவில்லை. விவசாயிகளின் உழைப்பை காங்கிரஸ் அரசு வீணடித்து விட்டது. இதனால், விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

அதேபோல், தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் ராணுவத்தினராலும், நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. விவசாயிகளின் தற்கொலைக்கும், ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கும் காங்கிரஸ்தான் காரணம்'' என்றார்.