Published:Updated:

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் 40 பேரும் இன்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்!

அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தலின் பேரில் இன்று பிற்பகலில் ஒரே சமயத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மதியம் 1.40 மணி முதல் மாலை 3 மணிக்குள் இவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்!

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், வடசென்னை அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரான மரகதம் குமரவேல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் கே.என். ராமச்சந்திரன் ஆகியோர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்!

காஞ்சிபுரம் வேட்பாளருடன் எம்.பி. மைத்ரேயன், தென்சென்னை எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், உத்திரமேரூர் எல்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் எல்எல்ஏ சோமசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்!

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளருடன் அமைச்சர் சின்னையா, பல்லாவரம் எம்எல்ஏ தன்சிங், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

படங்கள்: நாகமணி, சொ. பாலசுப்ரமணியன், பா.ஜெயவேல்