Published:Updated:

காங்கிரஸ் கோஷ்டிபூசல்: பாதியில் நின்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்!

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் அடி, தடியுடன் ஆரம்பித்ததால் பாதியிலேயே முடிவடைந்தது.

காங்கிரஸ் கோஷ்டிபூசல்: பாதியில் நின்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்!

விழுப்புரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.கே.வாசன் ஆதரவாளரான ராணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் இன்று தான் முதல்முறையாக தொகுதிக்கு வந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.

காங்கிரஸ் கோஷ்டிபூசல்: பாதியில் நின்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்!

அப்போது, அவர் வார்த்தைக்கு வார்த்தை ஜி.கே.வாசன் பெயரை மந்திரம் போல் உச்சரித்து கொண்டிருந்தார். இதில் கடுப்படைந்த ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இடைமறித்து, "ஜி.கே.வாசன் பெயரை மட்டுமே உச்சரிக்கிறீர்களே ப.சிதம்பரம் பெயரை சொல்ல மாட்டீர்களா? எந்த பேனரிலும் ப.சிதம்பரத்தின் படங்களையும் போடவில்லை அதனால் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்" என்றனர்.

காங்கிரஸ் கோஷ்டிபூசல்: பாதியில் நின்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்!

இதை பார்த்த ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள், 'ஜி.கே.வாசன் வாழ்க' என்று கோஷம் போட, பதிலுக்கு சிதம்பரம் ஆதரவாளர்களும் 'சிதம்பரம் வாழ்க' என்று கோஷம் போட்டனர். இதையடுத்து, மாவட்ட தலைவர் குலாம் மொய்தீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், விழுப்புரம் நகரத்திற்குள் வாக்கு கேட்டு உங்களால் வர முடியாது என்று ஆவேசமாக கூறினார்கள்.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அடி, தடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனே மாவட்ட தலைவர் 'சிதம்பரம் வாழ்க' என்று 3 முறை கோஷம் போட்டார். அதன் பிறகும் சிதம்பரம் ஆதரவாளர்கள் அமைதி அடையாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றனர்.

வேட்பாளரின் முதல் அறிமுக கூட்டமே தள்ளுமுள்ளில் முடிந்ததால் காங்கிரஸ் வேட்பாளர் மிகவும் அதிருப்தி அடைந்தார். இதை படம் எடுத்த பத்திகையாளர்களிடமும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், நாமக்கல் காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அவருடன் தங்கபாலு கோஷ்டியினரும், ஜி.கே.வாசன் கோஷ்டியினரும் சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.

ஆ.நந்தகுமார்

படங்கள்:
தே.சிலம்பரசன்