Published:Updated:

பா.ஜ. கூட்டணியில் சேர சரத் பவார் விரும்பினார்: உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர், பா.ஜனதா தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்பியதாகவும், ஆனால் அதனை தாம் தடுத்துவிட்டதாகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே,  "ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறுவதற்காக அனைத்து கதவுகளையும் திறந்தே வைக்கிறார் பவார்.

பா.ஜ. கூட்டணியில் சேர சரத் பவார் விரும்பினார்: உத்தவ் தாக்கரே தகவல்

தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் பா.ஜனதா கூட்டணியில் சேருவது குறித்து விவாதிப்பதற்காக அவர் கதவுகளை திறந்தே வைத்துள்ளார்.

ஆனால் பவார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என நான் மட்டுமல்லாது பா.ஜனதாவை சேர்ந்த கோபிநாத் முண்டே உள்ளிட்ட மகாராஷ்ட்ரா தலைவர்கள் உறுதியாக கூறிவிட்டோம்" என்று மேலும் கூறினார்.

இதனிடையே உத்தவ் தாக்கரேவின் இந்த கூற்றை மறுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரே கூறுவதில் உண்மை ஏதும் இல்லை என்றும், பா.ஜனதா கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.