Published:Updated:

காங்கிரஸ் வேட்பாளரால் காலதாமதமாக மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்!

மதுரை: தமிழகம் முழுதும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மதியம் 1.40க்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்த நிலையில்,  மதுரையில் காங்கிரஸ் வேட்பாளர் செய்த கால தாமதத்தால் 2.30 மணிக்குத்தான் அ.தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

நடிகர் கார்த்திக்கிற்கு மதுரை தொகுதியை கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில், மதுரை காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் திடீரென்று இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அவரது மனுவை ஆய்வு செய்த ஆட்சியர், 'அபிடவிட்' இல்லை என்று சொல்ல வீட்டுக்கு ஆள் அனுப்பினார் நாச்சியப்பன். வீட்டுக்குப்போன கட்சிக்காரர் இரண்டு மணி நேரம் கழித்து தான் அபிடவிட்டை கொண்டு வந்தார்.

அடுத்து, போட்டோ இணைக்கவில்லை என்று சொல்ல, மறுபடியும் போட்டோவை எடுக்க வீட்டுக்கு ஒருவர் ஓடினார். அதன்பின், வேட்பாளரை முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்கள் வரவில்லை என அவர்களை அழைத்து வரப்போனார்கள். இப்படியே மதியம் இரண்டு மணியாகி விட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனோ பெரும் கூட்டத்தோடு கட்சி காரியாலயத்திலிருந்து கிளம்பி வந்தவர், காங்கிரஸ் வேட்பாளரின் கால தாமதத்தால் வெளியிலேயே காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக காங்கிரஸ்காரர்கள் அங்கிருந்து போனவுடன் அ.தி.மு.க. வேட்பாளர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் உள்ளே வந்து மனு தாக்கல் செய்துவிட்டு சென்றார்.

இந்நிலையில், "அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு முதல்வர் குறிச்சு கொடுத்த நல்ல நேரத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விவரமாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு போகிறார்.

மேலும், அதைக் காணோம், இதைக் காணோம் என்று சொன்னதெல்லாம் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதற்குதான். வழக்கறிஞரான காங்கிரஸ் வேட்பாளருக்கு வேட்புமனு தாக்கல் செய்யும்போது எதையெல்லாம் கொண்டு வரணும்னு தெரியாதா?” என்று  அ.தி.மு.க.வினர் புலம்பிக் கொண்டே சென்றனர்.

செ.சல்மான், சாமுவேல்டேவிட் டில்டன்