Published:Updated:

பா.ம.க. இப்போது பாசக்கார மகன் கட்சியாக மாறிவிட்டது: நடிகை விந்தியா தாக்கு!

தருமபுரி: பா.ம.க. இப்போது பாசக்கார மகன் கட்சியாக மாறிவிட்டது என்று நடிகை விந்தியா கடுமையாக தாக்கி பேசினார்.

தருமபுரி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது, ''அ.தி.மு.க. சொத்து சேர்க்க ஆரம்பித்த கட்சி கிடையாது. அது, மக்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. கடந்த 82 ஆம் ஆண்டில் பா.ம.க.வை ஆரம்பிக்கும்போது, 'இது வன்னியர் இயக்கமாக இருக்கும். அரசியல் கட்சியாக மாற்ற மாட்டேன். சொந்த குடும்பத்தினரை சேர்க்க மட்டேன்' என்று ராமதாஸ் கூறினார்.

ஆனால் இப்போது, மகனுக்கு சீட் வாங்க மானத்தை அடகு வைத்து, மருத்துவமனையில் படுத்திருப்பதாக டிராமா ஆடுகிறார். அவர் ஜாதி நோயை பரப்புபவர். ராமதாஸ் இதுவரை நடிகர், நடிகைகளை மிக மோசமாக பேசி வந்துள்ளார். அதற்கு ஆண்டவன் வச்சான் சரியான ஆப்பு. எந்த நடிகரை எதிர்த்து நெஞ்சு நிமிர்த்தி அரசியல் பண்ணனும்னு பார்த்தாரோ, அந்த நடிகருக்கு ஆதரவாக பா.ம.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

தனியாக நிற்ப்பேன் என்று தம்பட்டம் அடித்த ராமதாஸ், பா.ஜ.க.விடம் தற்போது சரண்டர் ஆகிவிட்டார். ஜாதி, மக்கள் முன்னேற்றத்துக்காக வேலை செய்வதாக கூறிய ராமதாஸ், தற்போது மகனுக்காக வேலை செய்கிறார். இப்போது, அன்புமணி சொன்னாலும் ராமதாஸ் கேட்கமாட்டார். அன்புமணிக்கு டாடியைவிட மோடியைத்தான் பிடித்திருக்கிறது. பா.ம.க. இப்போது பாசக்கார மகன் கட்சியாக மாறிவிட்டது" என்று கடுமையாக தாக்கி பேசினார்.