ரேவதிப்ரியன், ஈரோடு.

'ராஜாத்தி அம்மாள், கனிமொழி, நான்... ஆகிய மூவரும் பிராமணர்களாக பிறக்காத காரணத்தால்தான் சில பத்திரிகைகள் எங்களைப் பற்றி இழிவாக எழுதுகிறார்கள்’ என்கிறாரே கருணாநிதி?

அவரைப் பாராட்டி எழுதும்போது மட்டும் அவர் பிராமணராக இருந்தாரா? அப்படி எழுதும்போது, 'முரசொலி’ முதல் பக்கத்தில் எடுத்துப்போட்டு, 'நான் சொல்லவில்லை, பேராசிரியர் சொல்லவில்லை, ஆற்காட்டார் சொல்லவில்லை... அவர்களே சொல்கிறார்கள்’ என்று நீட்டி முழக்கும்போது தெரியாதா என்ன?

திவ்யா, திருநெல்வேலி.

'40 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்று மு.க.ஸ்டாலின் சொல்வதன் அர்த்தம் என்ன?

ஆட்சியின் மீது பல்வேறு விஷயங்களில் அதிருப்தி பரவ ஆரம்பித்துள்ளது. அதனை ஆட்சியாளர்கள் உணராமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததால், மு.க.ஸ்டாலின் இப்படிச் சொல்கிறார்.

நெல்லை தேவமைந்தன், மதுரை-2.

'இலாகா மாற்றத்தால் நான் கவலைப்படவில்லை’ என்கிறாரே ஜெய்பால் ரெட்டி?

ஜெய்பால் ரெட்டி வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் கவலைப்பட வேண்டிய விஷயம் இது. ஓர் ஆண்டுக்கு முன்புதான் பெட்ரோலியத் துறை அமைச்சராக ஜெய்பால் ரெட்டி பொறுப்பேற்றார். அவர் வந்தது முதல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் அவருக்கும் ஆகவில்லை என்று டெல்லி பத்திரிகைகள் எழுதின. கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் எரிவாயு எடுக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டது. இந்தப் பணியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) அறிக்கையிலும் கூறப்பட்டது. இதைப் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற முறையில் ஜெய்பால் ரெட்டியிடம் கேட்டார்கள். 'இதை தீர்ப்பாயம் விசாரிக்கும்’ என்று ஒரு வரிப்பதில் சொன்னதுதான் ரெட்டி செய்த ஒரே தவறு. அதனால் அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டதாக எழுதுகிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் நினைத்தால் மத்திய அமைச்சர் ஒருவரை மாற்ற முடியும் எனும் அளவுக்கு டெல்லி யதார்த்தம் இருக்கிறது என்றால், கவலைப்படாமல் என்ன செய்ய?

சம்பத்குமாரி, பொன்மலை.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆட்சியில் இருக்கும்போது, போலீஸாருக்கு சலுகைகள் காட்டுகிறார்களே?

ஆட்சியாளர்கள் நினைப்பதை செய்து கொடுப்பவர்கள் போலீஸ்காரர்கள்தானே? அதனால்தான் பாசம்.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

டெசோ தீர்மான நகல்களை, ஐ.நா-வில் கொடுத்துள்ளதே தி.மு.க., இதற்கு ஏதாவது பலன் கிடைக்குமா?

ஐ.நா. அமைத்த மூன்று நபர் குழுவின் அறிக்கைக்கே இதுவரை பலன் கிடைக்கவில்லை. ஐ.நா-வில் கொண்டுபோய் மனு கொடுத்ததையே, 'வெற்றி’ என்று தி.மு.க. நினைப்பதுதான் அபத்தம். ஐ.நா-வுக்கு ஏதோ படை எடுத்துச் சென்று கொடுத்ததுபோல் காட்டுவது நகைப்புக்கு உரியது.

எஸ்.பி.விவேக், சேலம்.

கருணாநிதியுடன் விஜயகாந்த் கூட்டு சேர்வதற்கு ஜெயலலிதாவே வழி விடுவதுபோல் தெரிகிறதே?

இது ஓரளவு உண்மைதான். விஜயகாந்தின் ஒட்டுமொத்தக் கோபமும் ஜெயலலிதா மீது குவிந்துள்ளது கருணாநிதிக்கு சாதகமே. ஆனால், விஜயகாந்தை கூட்டணிக்குள் சேர்ப்பதில் தி.மு.க. அதிகார மையத்துக்குள் மாறுபட்ட சிந்தனைகள் உள்ளன. ஸ்டாலின், விஜயகாந்தை முழுமையாக வரவேற்க மனரீதியாக தயாராகிவிட்டார். மற்றவர்கள் யோசிக்கிறார்கள்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

'லஞ்ச ஊழலுக்கு எதிராக அதிக நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ்தான்’ என்று சோனியா கூறுகிறாரே?

இதில் இருந்து என்ன தெரிகிறது? லஞ்சமும் ஊழலும் காங்கிரஸ் ஆட்சியில் அதிகம் நடந்துள்ளது என்பதை சோனியாவே ஒப்புக்கொள்கிறார்!

எம்.சிவகுமார், வேதாரண்யம்.

பாப்புலாரிட்டியுடன் பணமும் சம்பாதிக்க எது பெஸ்ட்? அரசியலா... சினிமாவா?

இரண்டும்தான். ஒன்றில் விட்டதை இன்னொன்றில் அடையலாமே? சினிமா, பிரபல்யம் அரசியலுக்குப் பயன்படும். அரசியல் பணம், சினிமாவுக்குப் பயன்படும்.

கல்லல் பழ.பழனியப்பன், கரூர்-4.

நிருபரை விஜயகாந்த் தாக்க முயன்றது, நடிகர் வடிவேலு இதுவரை பேசிவந்ததை உண்மை ஆக்கிவிட்டதே?

'வடிவேலு காமெடியன் அல்ல; தீர்க்கதரிசி’ என்று நீங்கள் நினைப்பதை நான் எப்படி தடுக்க முடியும்?

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

பயம் கலந்த மரியாதை எப்படிப்பட்டதாக இருக்கக் கூடாது?

சொன்னால் வழக்கு பாயும். சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.