ஞாயிற்றுக்கிழமை காலையில் போன் செய்தோம். கழுகார் ரொம்பவே பிஸி. மதியத்துக்குப் பிறகு நமது லைனுக்கு வந்தவர், ''தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு வட்டாரத்திலும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கின்றன. காலையில் லண்டனில் இருந்து ஸ்டாலின் வந்தார். இன்னொரு பக்கம், முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் திருமணம், மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடந் தது. இரண்டுக்கும் சென்றதால் பிஸி. தீபாவளிக்காக முன்னதாகவே இதழை முடிக்கிறீர்... கொஞ்சம் காத் திரும்...'' என்றார்.

சொன்னபடியே, வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார்!

''முதலில், விமான நிலையம். டெசோ மாநாட் டுத் தீர்மானங்களை ஐ.நா. அமைப்பிடம் கொடுத்து விட்டுத் திரும்பும் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக, திடீரென பிரமாண்டமான ஏற் பாடுகள் செய்யப்பட்டன. சமீப காலமாகவே, கூச் சங்களை விடுத்து தீவிரமாக இயங்க ஸ்டாலின் முடிவெடுத்து விட்டார். டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்ததுதான் ஆரம்பம். அடுத்து, ஐ.நா-வுக்குச் சென்று தீர்மான நகலைக் கொடுக்கவும் முன்வந்தார். முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு உடன் சென்றார். அங்கிருந்து லண்டன் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த உலகத் தமிழர் பண்பாட்டு தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டார். அவருடன் கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தனது 12 நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையம் வந்தார். ஸ்டாலின் வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக ஒரு நாள் முன்னரே, டி.ஆர்.பாலு சென்னை வந்து விட்டார். அவர், விமான நிலையத்திலேயே தங்கி வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனித்தார். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தடபுடலான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.''

''விமான நிலைய வரவேற்பு தி.மு.க-வில் வழக்கமாக நடப்பதுதானே?''

''விமான நிலையத்துக்கு கருணாநிதியே வர ஒப்புக்கொண்டார். கருணாநிதியின் இந்த ஆர்வத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. ஐ.நா-வுக்கு டெசோ மாநாட்டுத் தீர்மானத்தைக் கொடுக்க ஸ்டாலினை அனுப்பிய கருணாநிதி, அதன் நகலை கனிமொழியிடம் கொடுத்து பிரதமரிடம் கொடுக்கச் சொன்னார். நாளிதழ்களில் இந்தச் செய்திகள் அடுத்தடுத்த நாட்கள் வெளியாகின. அமெரிக்காவில் இருந்த ஸ்டாலினுக்கு, இந்தச் செய்தி அதிகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாம். 'என்னை இங்கே அனுப்பிவிட்டு, டெல்லிக்கு கனிமொழியை அனுப்பினால் தேவை இல்லாத சர்ச்சை உண்டாகும் அல்லவா?’ என்று போனில் கொதிப்பைக் காட்டினார். ஸ்டாலினின் கோபத்தை உணர்ந்துகொண்ட கருணாநிதி, அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் விமான நிலையம் செல்வதற்கு முடிவு எடுத்தாராம். அன்றைய தினம் அறிவாலயத்தில் பிரமாண்டமான பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கும் கருணாநிதி அதன் பிறகுதான் முடிவு எடுத்தாராம்.''

''கருணாநிதியுடன் யாரெல்லாம் வந்தனர்?''

''கருணாநிதியுடன் கனிமொழியும் வந்தது பலருக்கும் அதிர்ச்சி. 'அவர் மனதில் எந்தக் கசப்பும் இல்லை’ என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டனர். மற்றபடி, வழக்கமான டீம்தான். பிரமாண்டமான வரவேற்புக்குப் பிறகு பேசிய ஸ்டாலின், 'தலைவர் தலைமையில் தி.மு.க. முன்னணியினர் மகத்தான வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பஞ்ச் அடித்தார்.''

''ஸ்டாலின் அதீத உற்சாகமாகி விட்டாரோ?''

''அவரது உற்சாகத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. விரைவில், தி.மு.க-வில் செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். கருணாநிதிக்கும் அத்தகைய பொறுப்பை ஸ்டாலினுக்குக் கொடுப்பதில் விருப்பம்தான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவிக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால், ஸ்டாலின்தான் உடனடியாக அறிவிக்கச் சொல்லி அவசரப்படுத்தினாராம். அந்த அறிவிப்புக்கான உத்தரவாதம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு விட்டதுதான் உற்சாகமாம்!''

''அப்படியானால் கனி மொழிக்கு?''

''அவருக்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வலம் வரக்கூடிய வாய்ப்பு தரப்படலாம். 'கனிமொழியை ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி-யாக்கி, அவரை டெல்லியில் முக்கியத்துவம் கொண்டவராக இயங்குவதற்கு ஸ்டாலின் அனுமதித்தால் போதும்’ என்று கருணாநிதி நினைக்கிறார்'' என்ற கழுகார், தீபா திருமணச் செய்திக்குத் தாவினார்.

''முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவுக்கும் மாதவனுக்கும், ஞாயிறு காலையில் திருமணமும் முந்தைய நாள் மாலை நிச்சயதார்த்தமும் நடந்தது. தன்னுடைய ஆசை அத்தை வந்து ஆசீர்வதிப்பார் என்று, மணமகள் தீபா எதிர்பார்த்துக் காத்திருந்தார். தீபா மட்டும் அல்ல அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் அதுதான். உள்ளே வந்த அனைவருமே, 'வர்றாங்களா’ என்றுதான் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். ஆனால், அத்தை வரவே இல்லை. தாலி கட்டும் நேரத்தில்கூட, தீபாவின் கண்கள் மண்டப வாசலைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தது. சுற்றமும் நட்பும் அட்சதை தூவ திருமணம் முடிந்து விட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு அத்தை இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அவர், எம்.நடராஜனின் சகோதரி வைஜெயந்தி மாலா.''

''விவாகத்தில் விவகாரமா?''

''ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் இருந்ததாகச் சொல்லப்படுபவர் இவர். ஜெயலலிதா கட்சியைவிட்டு நீக்கியவர் பட்டியலில் இவரது பெயரும் உண்டு. வைஜெயந்தி மாலாவைப் பார்த்தவுடன் தீபா வின் அம்மா விஜயலெட்சுமி கண்களில் ஆனந்தக் கண்ணீர். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, நலம் விசாரித்தனர். இந்த அத்தையைப் பார்த்து, தீபாவும் உருக்கமாகப் பேசினார். மணமகன் வீட்டாருக்கு வைஜெயந்தியை அறிமுகம் செய்துவைத்தனர். தாலி கட்டும்போதும் வைஜெயந்தி கூடவே நின்று, அவர் தனது கடமையைச் செய்தார். அதோடு கனமான பரிசு ஒன்றையும் கொடுத்தார். தாலி கட்டி முடித்தவுடன் உறவினர்கள் புறப்பட்டு விட்டனர். வைபவம் முடிந்ததும் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்த பிரசாதமும் சால்வையும் மணமக்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.நடராஜனும் வரு வதாக இருந்ததாம். ஆனால், மண்டபத்தில் பத்திரிகையாளர்கள் இருப்பதால், அவர் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு சகோதரியை அனுப்பிவைத்தாராம். உறவுக் காரப் பெண்கள் சிலர் இதுபற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருந் ததைக் கேட்க முடிந்தது. 'என்ன கோபமாம்?’ என்று கேட்ட ஒரு பெண்ணிடம், 'அதைக் கண்டுபிடிக்கிறதுக்கு இந்த லோகத்துல யாரு இருக்கா சொல்லு’ என்று இன்னொரு பெண் பதில்

சொல்லிக்கொண்டு இருந்தார்!'' என்ற கழுகாரிடம், ''என்னதான் நடக்கிறது கிரானைட் வழக்கில்?'' என்று ட்ராக்கை மாற்றினோம்.

''துரை தயாநிதி தலைமறைவாக இருக்கிறார். ஆனால், மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் முகமது உள்ளிட்ட 15 பேர் 9-ம் தேதி ஜாமீனில் வந்து விட்டனர். 'கிரானைட் வழக்குகளில் முதல் பாதியில் அதிகாரிகள் கை ஓங்கியதுபோல் தெரிந்தது. இப்போது அந்தப்பிடி தளர்ந்து, கிரானைட் கிங்கரர்கள் முன்னேறுவதுபோல் தெரிகிறது.’ என்று இந்த விவகாரத்தை உற்று நோக்கும் சில சட்டப் புள்ளிகள் சொல்கின்றனர். மேலூர், கீழவளவு காவல் நிலையங்களில் மட்டுமே பி.ஆர்.பி. மீது 30 வழக்குகள் இதுவரை பதிவாகி இருக்கின்றன. இதில் ஐந்தில் மட்டுமே அவர் ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டில் ஜாமீன் கிடைத்து, மூன்று வழக்குகளில் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகி இருக் கிறது.''

''எப்படி இருக்கிறார் பி.ஆர்.பி.?''

''நிலுவையில் உள்ள 14 வழக்குகளில் ரிமாண்ட் செய்வதற்காக 9-ம் தேதி மதியம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மேலூர் நீதிமன்றத்துக்கு பி.ஆர்.பி-யை அழைத்து வந்தனர். வேனில் இருந்து இறங்கும்போதே வாட்டமாகத்தான் இருந்தார். போலீஸார், பி.ஆர்.பி-யைக் கைத்தாங்கலாகத்தான் அழைத்து வந்தனர். அவருக்காக ஆஜரான வக்கீல்கள் வீர.கதிரவனும் அன்புச்செல்வமும் அவரது அருகில் சென்று பேசினர். 'உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் பாளையங்கோட்டையில் இருந்து, வந்துபோவது சிரமமாக இருக்கிறது. எனவே, பி.ஆர்.பி-யை மதுரை மத்தியச் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் ஜெயக்குமார், இந்த மனு மீதான தீர்ப்பை மாலைக்கு ஒத்தி வைத்தார். அதுவரை போலீஸ் வேனில் காத்திருந்த பி.ஆர்.பி, மாலை 4.45 மணிக்கு, நெஞ்சு வலிப்பதாகச் சொல்லி மயங்கி விழுந்தார். அவரைப் பரிசோதித்த லோக்கல் டாக்டர் கிருஷ்ணன், 'மைனர் அட்டாக்’ என்று சந் தேகத்தைக் கிளப்பினார். பி.ஆர்.பி-யை அப்படியே அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தனர் அவரது வக்கீல்கள். ஆனால், மதுரை ஜி.ஹெச்-சுக்கு அனுப்ப உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். இதையடுத்து, '108’ ஆம்புலன்ஸில் மதுரை ஜி.ஹெச்-சுக்கு கொண்டுவரப்பட்டார் கிரானைட் கிங். அங்கே, 'பயப்படும்படியாக எதுவும் இல்லை’ என்று டாக்டர்கள் சொன்னதால், மீண்டும் பாளையங்கோட்டைக்கு போலீஸ் வேனில் பயண மானார்.''

''ஓஹோ!''

''குவாரிகளை இயக்குவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவு போட்டதால் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று தெம்பாக இருந்தார் பி.ஆர்.பி. இப்போது டிவிஷன்

பெஞ்ச் தடை விழுந்து விட்டதால், ஆள் ரொம்பவே அப்செட். அத்தனை வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், புதிதாக ஒரு வழக்கைப் புகுத்துவதற்கு போலீஸ் தயாராக இருக்கிறது. ஆக, அரசு ஒரு முடிவெடுக்காதவரை பி.ஆர்.பி. வெளியில் வர முடியாது. 'வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போன்று, தெளிய வெச்சு தெளிய வெச்சு அவரை வழக்குகளால் அடிக்கிறாங்க. இந்த மனஉளைச்சல் அவரது உடல்நிலையை வெகுவாகப் பாதிச்சிருச்சு. அதுதான் மனுஷன் துவண்டு விட்டார்’ என்கிறார்கள் அவரது ஆட்கள். இந்த 90 நாட்களில் 10 கிலோ எடை குறைந்து விட்டாராம் பி.ஆர்.பி. முதுகுத் தண்டுவடத்தில் பிரச்னை இருப்பதால், அதிகநேரம் அவரால் உட்காரவும் முடியவில்லையாம்.''

''ம்!''

''ஆனால், ஆட்சி மேலிடம் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறது என்பது பி.ஆர்.பி-க்கு உடனுக்குடன் வந்து விடுகிறது என்பதுதான் அதிர்ச்சியான ஆச்சர்யம்!''

''யாராம்?''

''அதிகாரி ஒருவரா... அமைச்சர் இருவர்களா அல்லது மூவருமேவா என்பதில்தான் குழப்பம் இருக்கிறது!

'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! சி.எம். மனசு மாறிடுவாங்க’ என்று தைரியம் சொல்கிறார்களாம் அந்த மூவரும்!'' என்ற கழுகார் அடுத்து ஆளும் கட்சி சட்டத் துறை சம்பந்தமான மேட்டர் ஒன்றை எடுத்தார்.

''தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மீது மற்ற அரசு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 'தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருப்பவர், அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் மிக முக்கியமான வழக்குகள், அரசின் மிகப்பெரிய திட்டங்கள் நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாகும் முக்கியமான தருணங்களில்தான் ஆஜராகி வாதாடுவார். கடந்த காலங்களில் அப்படித்தான் நடைமுறை இருந்தது. மற்றபடி அரசின் துறை ரீதியான வழக்குகளை, அந்தந்தத் துறைக்கு அரசின் சார்பில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு உள்ள அரசு பிளீடர்களும், கிரிமினல் வழக்குகளை பப்ளிக் பிராசிக்யூட்டர்கள் என்று அழைக்கப்படும் அரசு வழக்கறிஞர்களும் நடத்துவார்கள். ஆனால், இப் போது அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன், அரசு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் தானே ஆஜராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்’ என்பதே அவர்களது புலம்பலுக்குக் காரணம்.''

''மேலும் சொல்லும்!''

''இதனால், குறிப்பிட்ட துறை ரீதியான வழக்குகளை அதற்கு என்று நியமிக்கப்பட்டு உள்ள அரசு பிளீடர்களால் நடத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் அரசுக்குத் தொடர் தோல்விகள் ஏற்படுவதாகவும் கருதுகின்றனர். 'கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் அரசு வழக்குகளை நடத்தியதற்குக் கட்டணமாக தலைமை வழக்கறிஞர் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ள தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது’ என்கிறார்கள்.

அவசியம் இல்லாமலே பல வழக்குகளுக்கு அவர் வந்து ஆஜராவதற்கு இதுதான் காரணம் என்றும் பேச்சு!'' என்ற கழுகார் ''அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்'' என்று சொல்லி விட்டுப் பறந்தார்!

அட்டைப் படம்: சொ.பாலசுப்பிரமணியன்

படங்கள்: சு.குமரேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பிரதமர் ஆலோசகர் வருகை

சென்னையில் திடீரென ஒரு சந்திப்பு. பிரதமர் மன் மோகன் சிங்கின் ஆலோசகர் டி.ஏ.கே.நாயர், முதல்வர் ஜெயலலிதாவை கடந்த 9-ம் தேதி சந்தித்தார்.

'மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில், மாநில அரசாங்கத்தின் ஒத்து ழைப்பு சரியாக இல்லை என்ற வருத்தத்தில் பிரதமர் இருக்கிறாராம். அதை முதல்வரிடம் சொல்வதற்குத்தான் நாயர் வந்தார்’ என்கிறார்கள்.

ஜெயக்குமார் மிஸ்ஸிங்

நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க-வில் நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி வட சென்னையில் நடந்த கூட்டத்தில், வழக்கமான நால்வர் குழு கலந்து கொண்டது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோரின் பெயர்கள் பேனரிலும் போஸ்டரிலும் இல்லை. 'அவர்களை யாரும் அழைக்கவில்லை. புறக்கணிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இருவரும் ஒதுங்கிக் கொண்டனர்’ என்கிறார்கள்!

சுடிதாரில் சசிகலா!

முதல்வரின் தனி உதவியாளர்களில் ஒருவரான பூங்குன்றனின் சகோதரருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மணமக்கள் கார்டனுக்கு வந்து முதல்வரிடம் ஆசி வாங்கினர். அப்போது, சசிகலாவும் உடன் இருந்தார். அதுவும் சுடிதாரில். 'அம்மாவும் சின்னம்மாவும் மீண்டும் நல்லபடியா ராசி ஆகிட்டாங்க என்பதற்கு உதாரணம் இந்த போட்டோ. சின்னம்மா எப்பவும் கார்டன்ல இருக்கும்போது சுடிதார்லதான் இருப்பாங்க. ஆனா, போட்டோ எடுக்கும் போது வரமாட்டாங்க. அதைமீறி, இந்த போட்டோவில் இருப்பது, அவர்களது பழைய நட்பை உறுதிப்படுத்துகிறது’ என்கிறார்கள்.