Published:Updated:

தலையங்கம் - தப்பு வைத்தியம்!

தலையங்கம் - தப்பு வைத்தியம்!

தலையங்கம் - தப்பு வைத்தியம்!

தலையங்கம் - தப்பு வைத்தியம்!

Published:Updated:
தலையங்கம் - தப்பு வைத்தியம்!

ன்னொரு சாதி இளைஞரைத் தனது மகள் மணம் முடித்ததில் மனம் உடைந்தார் தந்தை. சொந்த சாதியைச் சேர்ந்தவர்களின் நெருக்கடியும் சேர்ந்துவிட, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். காத்திருந்ததுபோல உருவான கலவரத்தில் மணமகனின் சாதியைச் சேர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புகள் சூறையாடிக் கொளுத்தப்பட்டன. ஊரே மயான பூமி ஆனது. தருமபுரியில் அரங்கேறியுள்ள இந்த அவலம், நம்மை எல்லாம் வெட்கித் தலை குனியவைக்கிறது.

 வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளே பெரும் சவாலாக மாறிப்போய், ஊரையும் உறவுகளையும் துறந்து, பிழைப்பு தேடி எங்கெங்கோ அலைய வேண்டிய இந்தக் காலகட்டத்தில், சாதி எனும் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு முன்னேறத்தான் நினைக்கிறார்கள் மக்கள். அரசியல் சக்திகளுக்கோ அப்படி ஒரு மாற்றம் நிகழ்வதில் துளியும் விருப்பம் இல்லை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை சாதி ஒழிப்பு - வெற்று முழக்கம். சாதியின் அடிப்படையில்தானே வேட்பாளர் தேர்வே நடக்கிறது. எந்தக் கட்சி இதற்கு விதிவிலக்காக இருக்கிறது? ஓட்டு அரசியலுக்காகத் தாங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்று அரசியல்வாதிகள் எப்போதுதான் யோசிப்பார்கள்?

இந்தியாவைப் பொறுத்த அளவில் சாதி வெறியை ஒழிக்காத வரையில் சமூக நீதியை முழுமையாக அடையும் சாத்தியம் இல்லை. இதற்கான இயல்பான ஆயுதம் - கலப்புத் திருமணங்கள்தான். அதற்கு அரசு தர வேண்டிய முக்கியத்துவம் அதிகம். கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பதோடு, அவர்களுக்கான வாழ்வுரிமையும், அவர்தம் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வலுவான இட ஒதுக்கீட்டு உத்தரவாதமும் அளிக்க வேண்டும். கூடவே, கலப்புத் திருமணத்துக்கு எதிரான கருத்துக்கள் விதைப்போரை ஒடுக்கும் வகையில் கடுமையான சட்டப் பிரிவையும் உருவாக்க வேண்டும்.

நோய்கள் நீடிக்கும் வரையில்தான் நமக்குத் தொழில் நடக்கும் என்று ஒரு வைத்தியர் நினைத்தால், அது எத்தனை பாவம்! 'சாதிகள் இருக்கிற வரையில்தான் நமக்கான ஓட்டுக்கள் கிடைக்கும்' என்று நினைப்பதும் அப்படித்தான்!