Published:Updated:

ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க., காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும்: கெஜ்ரிவால்

ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க., காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும்: கெஜ்ரிவால்
ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க., காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும்: கெஜ்ரிவால்
ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க., காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும்: கெஜ்ரிவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி திரிலோகபுரி பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசும்போது, ''49 நாள் ஆட்சியில் மக்கள் நலனுக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த ஆம் ஆத்மியிடம் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்பது ஒன்றும் பெரிதல்ல. அதற்கு நல்ல எண்ணம் ஒன்றே தேவை. எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்றே ஆம் ஆத்மிக்கு தெரியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் செய்யாத பல மக்கள் நல நடவடிக்கைகளை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு எடுத்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஊழலை ஒழிக்க நடவடிக்கைகளை எடுத்தோம். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மின் வினியோக நிறுவனங்களிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு டெல்லியில் குடிநீர், மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது பேசாமல் இருந்துவிட்டன.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் போலீஸ் அதிகாரிகள் மக்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதை நிறுத்தியிருந்தனர். ஆனால், நாங்கள் ஆட்சியை விட்டு விலகியதும் மீண்டும் லஞ்சம் வாங்கத் துவங்கி விட்டனர்" என்றார்.