Published:Updated:

எங்கள் வெற்றியைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது: மோடி

புதுதில்லி: நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானது என்று மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறினார்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியை உலகின் எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. இந்த முடிவுகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அறியப்பட்ட ஒன்று. தேர்தலில் முடிவு என்னவென்று மக்கள் அறிவார்கள்.

இந்த அரசு நீடிக்க கூடாது என்பதை ஒட்டுமொத்த நாடும்  ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை விட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டை பாழாக்கி இருக்கிறது என்பது சாமானிய மனிதனுக்குக் கூட தெரியும்" என்றார்