Published:Updated:

அன்புமணி ராமதாஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

விகடன் விமர்சனக்குழு
அன்புமணி ராமதாஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!
அன்புமணி ராமதாஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!
அன்புமணி ராமதாஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

தருமபுரி: சந்தபட்டி கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். அவர் நேற்று இரவு சந்தபட்டி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த வாகனம் மீது திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசினர். இதில், அவரது வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த பா.ம.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனிடையே, அன்புமணி ராமதாசை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.