Published:Updated:

போயஸ் தோட்டத்தில்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும்: வைகோ

விகடன் விமர்சனக்குழு
போயஸ் தோட்டத்தில்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும்: வைகோ
போயஸ் தோட்டத்தில்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும்: வைகோ
போயஸ் தோட்டத்தில்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும்: வைகோ

சென்னை: போயஸ் தோட்டத்தில் மாதிரி பாராளுமன்றம் கட்டினால்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும் என்று சென்னையில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது வைகோ கூறினார்.

சென்னை மன்னடி பகுதியில் வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''2 ஜி வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ஆ.ராசா தேர்தலில் எப்படி நிற்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையை கொண்டுள்ளது. போயஸ் தோட்டத்தில் மாதிரி பாராளுமன்றம் கட்டினால்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும். ஜெயலலிதா, தம் கட்சி அங்கம் வகிக்கப்போகிற கூட்டணி எது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

அண்ணா பதவி ஏற்றபோது அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்க கூடாது என உத்தரவே போட்டார். ஆனால், அவர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் திராவிட கட்சிகள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்களா?" என்று பேசினார்.