Published:Updated:

டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

விகடன் விமர்சனக்குழு
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு டெல்லியிம் தக்‌ஷின்புரியில் இன்று திறந்த வாகனத்தில் கெஜ்ரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருவர் கெஜ்ரிவாலின் கழுத்தில் குத்தி, அடித்தார்.

இதனையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதனையடுத்து அந்த நபர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், " நாம் உண்மைக்காகவும், நேர்மைக்காவும் போராடி வருகிறோம். அவர்கள் நம்மை தாக்கட்டும்,. ஆனால் நாம் அவர்களை திருப்பி தாக்கக்கூடாது. நாம் வன்முறையை கையிலெடுத்தால் நமது இயக்கம் முடிந்துபோய்விடும். எனவே எதிர்காலத்தில் நம்மை தாக்கியவர்களிடமும் நாம் அன்புடன் நடந்துகொள்ளவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் வாரணாசியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் மீது கறுப்பு மை மற்றும் ஆயிலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.