Published:Updated:

முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரானவர் மோடி: உமர் அப்துல்லா

விகடன் விமர்சனக்குழு
முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரானவர் மோடி: உமர் அப்துல்லா
முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரானவர் மோடி: உமர் அப்துல்லா
முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரானவர் மோடி: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: மோடியின் முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரான போக்கு, அவரை பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவராக ஆக்கியுள்ளது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நல்ல நண்பராக இருக்கிறார். ராகுல் நாட்டை வழி நடத்துவதற்கு பொருத்தமானவர்.

ஆனால், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடி சர்வாதிகார போக்கு கொண்டனர். மேலும், முஸ்லீம் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிரான இவரது போக்கு அவரை பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவராக ஆக்கியுள்ளது'' என்றார்.