Published:Updated:

காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதா குற்றப்பத்திரிகை வெளியீடு: சோனியா, ராகுல் மீது கடும் தாக்கு!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வெளியிட்டுள்ள பா.ஜனதா கட்சி, பிரதமர் அலுவலகத்தை சோனியாவும், ராகுல் காந்தியும் மதிப்பிழக்கச் செய்துவிட்டனர் என குற்றச்சாட்டியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதாவின் மூத்த செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் அரசு மீதான 'குற்றப்பத்திரிகை' என அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 அப்போது அவர், "இந்திய பொருளாதாரத்தை காங்கிரஸ் சீரழித்து விட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தொழில் வளர்ச்சி மிகவும் குறைந்து விட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முடிவில்லாத ஊழல்கள் நடைபெற்றுள்ளது. பொருளாதாரத்தை சீர்குலைந்துள்ளது பிரதமர் அலுவலகத்தையும், சோனியாவும், ராகுல் காந்தியும் மதிப்பிழக்கச் செய்து விட்டனர்.

ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் பல ஊழல்கள் காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறி உள்ளன. ஆனால், எந்த வழக்கையும் தீர விசாரிப்பதில் காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை. நாட்டின் மோசமான நிலைக்கு சோனியா, ராகுல் மற்றும் மன்மோகன்சிங் ஆகியோரே காரணம். வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. எல்லையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள், தாக்குதல்கள் நடந்துள்ளன'' என மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார்.