Published:Updated:

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: டெல்லி மசூதி தலைமை இமாம் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: டெல்லி மசூதி தலைமை இமாம் அறிவிப்பு!
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: டெல்லி மசூதி தலைமை இமாம் அறிவிப்பு!
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: டெல்லி மசூதி தலைமை இமாம் அறிவிப்பு!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி ஜூம்மா மசூதியின் தலைமை இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டெல்லி ஜூம்மா மசூதியின் தலைமை இமாம் சையத் அகமது புகாரி சந்தித்துப்பேசினார். அப்போது மதச்சார்பற்ற வாக்குகள் பிளவுபடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று டெல்லி ஜூம்மா மசூதியின் தலைமை இமாம் சையத் அகமது புகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் இஸ்லாமியர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினேன்.

இஸ்லாமியர்களின் பிரச்னைகளைகளுக்கு தீர்வு காண்பதாக சோனியா கூறினார். மேலும், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி உள்பட அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

மதச்சார்பற்ற வாக்குகள் சிதைந்துவிடக்கூடாது என்று இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்துள்ளேன். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது பயனில்லாதது'' என்றார்.