Published:Updated:

பொய்யரை பிரதமராக தேர்வு செய்யக்கூடாது: மோடி மீது சோனியா கடும்தாக்கு!

விகடன் விமர்சனக்குழு

ராஞ்சி: பொய்யரை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யாதீர்கள் என தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிப்பேசினார் சோனியா காந்தி.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''எதிர்க்கட்சி தலைவர்கள், மந்திரக்கோல் மூலமாக ஒரே நாளில் அனைத்தையும் மாற்றி விடலாம் என கனவு காண்கிறார்கள். அவ்வாறு செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற ஒரு மிகப்பெரிய பொய்யரை நாடு பிரதமராக தேர்வு செய்ய வேண்டுமா? அதுபோன்ற ஆட்களை பிரதமராக தேர்வு செய்யாதீர்கள் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தில் யாரை வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அனுமதிக்ககூடாது. தொழிலாளர்கள் நிலையை மேம்படுத்தும் பொருட்டு நிலக்கரி சுரங்கங்களை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார்'' என்ற சோனியா காந்தி, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தவற்றை பட்டியலிட்டார்.