Published:Updated:

அ.தி.மு.க வயிற்றில் அடிக்கும், பா.ஜ. தலையில் அடிக்கும்: ப.சிதம்பரம் பேச்சு

விகடன் விமர்சனக்குழு

சிவகங்கை: அ.தி.மு.க. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும். பா.ஜ.க. தலையில் அடிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் சிவங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கல்லல் ஒன்றிய பகுதிகளில் இன்று (4ஆம் தேதி) பிரசாரம் செய்தார்.

அப்பொழுது பேசிய அவர், ''கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்கள் பார்க்க வேண்டும். இத்தொகுதியில் மட்டும் 19 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் பசியை போக்க நூறுநாள் வேலை என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.

தற்பொழுது நாள் ஒன்றிற்கு 142 ரூபாய் கூலியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கூலி குறைவாக கிடைக்க காரணம் தமிழக அரசுதான். அவர்கள் தான் கூலியை குறைத்து தருகிறார்கள். அதே நேரம் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தையே இல்லாமல் செய்து விடுவார்கள்.

அ.தி.மு.க. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் என்றால், பா.ஜ.க. ஏழை மக்களின் தலையில் அடிக்கும். இத்திட்டம் இல்லை என்றால் உங்கள் நிலையை நினைத்து பாருங்கள். எனவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார்.