Published:Updated:

சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!

விகடன் விமர்சனக்குழு
சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!
சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!

மதுரை: வேட்பாளரை மாற்றிவிடுவார்களோ என்ற சோகத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார் மதுரை தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமார்.

சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!

மதுரை தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், அவரது பிரசார வேன் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், வேட்பாளர் சிவமுத்துக்குமார் தேர்தலுக்காக செலவு செய்யாமல் இருக்கிறார் என்ற புகாரையடுத்து, அவருக்கும், கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே பிரச்னை என்பதால்தான் விஜயகாந்த் பிரசாரத்தை ரத்து செய்து விட்டார் என கூறப்பட்டது.

சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!

இதையடுத்து, சவுராஷ்டிரா சமூகத்திலிருந்து, ஒருவரை தே.மு.தி.க. வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்றும் தகவல்கள் பரவியது. இதையடுத்து, என்னை மாற்றினால் தே.மு.தி.க. டெபாசிட் கூட வாங்காது என சிவமுத்துக்குமார், விஜயகாந்திடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்ததுபோல், இன்று தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். ஆனால், தே.மு.தி.க. சார்பில் வேறு வேட்பாளர்களை நிறுத்தி விடுவார்களோ என்ற கவலையோடு அவர் இருந்ததாக தெரிகிறது. மனுத்தாக்கல் செய்ய வந்த அவர் முகம் உற்சாகமில்லாமல் ரொம்ப டல்லாக இருந்தது.

சோகத்துடன் வேட்புமனு செய்த மதுரை தே.மு.தி.க. வேட்பாளர்!

இதையடுத்து, தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலர் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்தனர்.

செ.சல்மான், சாமுவேல் டேவிட் டில்டன்

படங்கள்: பா.காளிமுத்து