Published:Updated:

காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம்: களமிறங்குவாரா கார்த்திக்?

 காங்கிரஸ் கட்சிக்கு  பிரசாரம்: களமிறங்குவாரா கார்த்திக்?
காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம்: களமிறங்குவாரா கார்த்திக்?
 காங்கிரஸ் கட்சிக்கு  பிரசாரம்: களமிறங்குவாரா கார்த்திக்?

சென்னை: நடிகர் கார்த்திக்கை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த ஞானதேசிகன், காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், மதுரை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே மதுரைக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தொகுதியை தர இயலாது என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

 காங்கிரஸ் கட்சிக்கு  பிரசாரம்: களமிறங்குவாரா கார்த்திக்?

மேலும், தென் சென்னை தொகுதியில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனவும் கார்த்திக்கிடம் கூறப்பட்டதாம்..

இந்நிலையில், இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், நடிகர் கார்த்திக்கை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, ''மதுரை தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளரை நிறுத்திவிட்டதால், அந்த தொகுதியை உங்களுக்கு ஒதுக்க முடியாது. தென் சென்னையில் போட்டியிடுகிறீர்களா? என ஞானதேசிகன் கேட்டதாகவும், மேலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஞானதேசிகனின் இந்த வேண்டுகோள் குறித்து பரிசீலனை செய்து, இன்று அல்லது நாளை காலை தனது முடிவை கார்த்திக் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.