Published:Updated:

காஷ்மீர் எல்லை அருகே தீவிரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிப்பு!

காஷ்மீர் எல்லை அருகே தீவிரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிப்பு!
காஷ்மீர் எல்லை அருகே தீவிரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிப்பு!
காஷ்மீர் எல்லை அருகே தீவிரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிப்பு!

ஜம்மு: காஷ்மீர் எல்லை அருகே தீவிரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டில் பல்வேறு இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தப்போவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள புனேஜா-பதர்வா காடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியன் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய இந்த வேட்டையில், தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு ஏ.கே. 47 உள்பட 6 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், ரேடியோக்கள் மற்றும் சமையல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், தீவிரவாதிகள் ஒருவரும் சிக்கவில்லை. தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.