Published:Updated:

பா.ஜ.வுக்கு ஓட்டுபோட்டு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்: மோடி உதவியாளரின் பேச்சால் சர்ச்சை!

Vikatan Correspondent
பா.ஜ.வுக்கு ஓட்டுபோட்டு  பழி தீர்த்துக்கொள்ளுங்கள்: மோடி  உதவியாளரின் பேச்சால் சர்ச்சை!
பா.ஜ.வுக்கு ஓட்டுபோட்டு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்: மோடி உதவியாளரின் பேச்சால் சர்ச்சை!
பா.ஜ.வுக்கு ஓட்டுபோட்டு  பழி தீர்த்துக்கொள்ளுங்கள்: மோடி  உதவியாளரின் பேச்சால் சர்ச்சை!

லக்னோ: பா.ஜனதாவுக்கு ஓட்டுபோட்டு உங்களது பழியை தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும்,  'முல்லா' முலாயம் ஆட்சியை வேரோடு அகற்றுங்கள் என உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொறுப்பாளரும், மோடியின் நெருங்கிய உதவியாளருமான அமித் ஷா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் குஜராத் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றியவர் அமித் ஷா. மோடிக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் இவர் மீது, குஜராத் கலவரம் தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் போலி என்கவுன்டர் வழக்கிலும் இவர் பெயர் அடிபட்டது.

மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால், அம்மாநிலத்தின் தேர்தல் பிரசார பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கலவரம் நடந்த முஷாஃபர்நகருக்கு அருகே உள்ள பிஜ்னூர் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, "முஷாஃபர்நகர் கலவரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, " நீங்கள் (இந்துக்கள்) பழிவாங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களது ஓட்டை பா.ஜனதாவுக்கு போடுங்கள். வாள் மற்றும் அம்புகளால் இந்த பிரச்னையை நீங்கள் தீர்த்துக்கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.இந்நிலையில் அதற்கு பழிவாங்க இதுவே

பா.ஜ.வுக்கு ஓட்டுபோட்டு  பழி தீர்த்துக்கொள்ளுங்கள்: மோடி  உதவியாளரின் பேச்சால் சர்ச்சை!

தருணம்.முகலாயர் ஆட்சி காலத்தில்தான் பழிவாங்குவதற்காக வாள்களும், அம்புகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது நீங்கள் ஓட்டு போட்டே உங்களது பழியை தீர்த்துக்கொள்ளலாம்.

மோடிக்கு ஓட்டு போடுவதன் மூலம் நீங்கள் இரண்டு விஷயங்களை செய்கிறீர்கள். ஒன்று மத்தியில் மோடி ஆட்சியை கொண்டு வருகிறீர்கள். மற்றொன்று 'முல்லா' முலாயம் அரசை லக்னோவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியலாம்" என்றார்.

இந்நிலையில் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ராம் கோபால் யாதவ், நாடாளுமன்ற தேர்தலில் முஷாஃபர்நகர் மக்கள் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பார்கள் என்ன்று கூறியுள்ளார்.

அதேப்போன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யவர்தி சதுர்வேதி, முஷாஃபர்நகர் போன்ற பதற்றமான பகுதியில் அமித் ஷா மத பதற்றத்தை தூண்டிவிடுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் புகார்

இதனிடையே அமித் ஷாவின் இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.