Published:Updated:

காந்திநகர் தொகுதியில் அத்வானி வேட்பு மனு தாக்கல்!

Vikatan Correspondent
காந்திநகர் தொகுதியில் அத்வானி வேட்பு மனு தாக்கல்!
காந்திநகர் தொகுதியில் அத்வானி வேட்பு மனு தாக்கல்!
காந்திநகர் தொகுதியில் அத்வானி வேட்பு மனு தாக்கல்!

புதுடெல்லி: காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் 6வது முறையாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், காந்திநகர் தொகுதியில் அத்வானி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நரேந்திர மோடி முன்மொழிந்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக கூறினார்.

காந்திநகர் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று கூறி வந்த அத்வானியை, பா.ஜனதா மூத்த தலைவர்கள் சமாதனத்திற்கு பிறகு அத்தொகுதியில் போட்டியிட சம்மதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.