Published:Updated:

மக்களை மறந்து விலங்குகளை சந்திக்க சென்றவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் தாக்கு!

Vikatan Correspondent
மக்களை மறந்து விலங்குகளை சந்திக்க சென்றவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் தாக்கு!
மக்களை மறந்து விலங்குகளை சந்திக்க சென்றவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் தாக்கு!

விருதுநகர்: கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களை மறந்து காட்டு விலங்குகளை சந்திக்கச் சென்றவர் ஜெயலலிதா என்று விருதுநகர் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.

மக்களை மறந்து விலங்குகளை சந்திக்க சென்றவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் தாக்கு!

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ரத்தினவேலுக்கு ஆதரவுகோரி அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''எழுச்சியான, மகிழ்ச்சியான, உணர்ச்சியான உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் உங்கள் ஊர் மாப்பிள்ளை. எனவே, அவரை வெற்றிபெறச் செய்வது உங்கள் கடமை. எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர்களை பற்றிக் கூறி என்னை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

மக்களை மறந்து விலங்குகளை சந்திக்க சென்றவர் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் தாக்கு!

தி.மு.க. கூட்டணியிலிருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றவர் இந்தத் தொகுதி மக்களுக்காக எதுவுமே செய்யாமல் மீண்டும் இத்தொகுதியில் வேறொரு கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறார். தி.மு.க. ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடக்க விழா மதுரையில் நடந்தபோது, இன்று தான் எனது வாழ் நாளில் நான் மிகப்பெரிய மகிழ்ச்சியடைகிறேன் என்றவர், இப்போது அத்திட்டத்தை எதிர்க்கும் கூட்டணியில் சேர்ந்து சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.

ஜெயலலிதா கடந்த 3 ஆண்டு காலத்தில் மக்களுக்காக என்ன செய்தார்? ஆனால், மக்களைப் பார்த்து செய்வீர்களா? செய்வீர்களா? என்று மட்டும் கேட்கிறார். அவரிடம் நீங்களும் கேளுங்கள். செய்தீர்களா? செய்தீர்களா? மக்களுக்கு என்னத்த செஞ்சு தொலச்சீங்க? என்னத்த செஞ்சு கிழிச்சீங்கன்னு. மக்களை மறந்து காட்டு விலங்குகளைப் பார்க்கச் சென்றவர் ஜெயலலிதா. அதனால்தான் யானைக் குட்டியே அவரை முட்டித் தள்ளியது. ஏன் தெரியுமா? 6 அறிவு உள்ள மக்களை மறந்து 5 அறிவு உள்ள எங்களை ஏன் பார்க்க வந்தீர்கள் என்று தான்.

ஐந்து அறிவு கொண்ட யானைக் குட்டியே அவருக்கு பாடம் புகட்டும்போது, 6 அறிவு கொண்ட நாம் அவருக்கு பாடம் புகட்ட வேண்டாமா? தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் வணிகர்களுக்கு எவ்வளவு நல்ல காரியங்கள் செய்துள்ளார் என்பது அவர்களுக்கும்,. பொதுமக்களுக்கும் தெரியும். மத்தியில் நேர்மையான, நிலையான, மதசார்பற்ற ஆட்சி அமைய, தி.மு.க. தலைவர் சுட்டிக்காட்டும் நபர் பிரதமராக தி.மு.க. வேட்பாளரான ரத்தினவேலுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்ச செய்ய வேண்டும்" என்றார்.

எம்.கார்த்தி

படம்:
ஆர்.எம்.முத்துராஜ்