Published:Updated:

நாடு ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: கார்த்திக்

Vikatan Correspondent
நாடு ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: கார்த்திக்
நாடு ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: கார்த்திக்

சென்னை: நாடு ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நாடு ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: கார்த்திக்

நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நிருபர்களை சந்தித்தபோது, ''வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தேர்தல், சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான காலம். நாடு நன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். இதை வேறு கட்சிகளால் செய்ய முடியாது. நாங்கள் தேர்தலில் தனியாக நிற்க முடியும். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கு சமஉரிமை, சீனாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சி என்று இந்தியா சாதித்துக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் அறிவுப்பூர்வமான ஆட்சி தான் காரணம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மறைத்து சிலர் பொய்யான தகவல்களை கூறுகிறார்கள். நான் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, கோவிலுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. இந்த கோவிலைவிட்டு வெளியே போகமாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் என்னுடன் விவாதம் நடத்தலாம். நாட்டின் நலன் கருதி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற உறுதி ஏற்போம்.

விளம்பரம் இல்லாமல் செயல்படும் கட்சி எங்கள் கட்சி. நாங்கள் நேராக மக்களை சந்தித்து தேவைகளை நிறைவேற்றுவதால், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளோம். தற்பெருமை பேசுவதில் எனக்கு பழக்கம் கிடையாது. நாங்கள் ஒன்றும் பணக்கார கட்சி இல்லை. ஆனால், மனிதர்களை மதிக்கும் கட்சி, மக்களுக்காக உழைக்கும் கட்சி" என்றார்.

படங்கள்: முத்துக்குமார்