Published:Updated:

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Vikatan Correspondent
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி  வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி  வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தில் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெய்ப்பால் ரெட்டி உள்ளிட்ட மூன்று மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த முறை எம்.பி.க்களாக இருந்த பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 110 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.