Published:Updated:

மின் வெட்டை பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா ஆகாயத்தில் பறக்கிறார்: நடிகை குஷ்பு

Vikatan Correspondent

திண்டுக்கல்: மின் வெட்டை பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா ஆகாயத்தில் பறக்கிறார் என்று நடிகை குஷ்பு கூறினார்.

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையை அடுத்துள்ள பாளையத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தபோது, ''தமிழகத்தில் தினமும் 10 மணி நேர மின்வெட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரசாரத்துக்காக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகாயத்தில் பறக்கிறார். தமிழக மக்கள் மின் வெட்டால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, அ.தி.மு.க.வை அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் எழுச்சியை பார்க்கும்போது அ.தி.மு.க.வை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகி விட்டது" என்றார்