Published:Updated:

மத்திய ஆட்சியை சோனியா காந்தி சீர்குலைத்துவிட்டார்: மோடி குற்றச்சாட்டு!

Vikatan Correspondent
மத்திய ஆட்சியை சோனியா காந்தி சீர்குலைத்துவிட்டார்: மோடி குற்றச்சாட்டு!
மத்திய ஆட்சியை சோனியா காந்தி சீர்குலைத்துவிட்டார்: மோடி குற்றச்சாட்டு!
மத்திய ஆட்சியை சோனியா காந்தி சீர்குலைத்துவிட்டார்: மோடி குற்றச்சாட்டு!

பிஜ்னூர்: மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியாகாந்தி தலையிட்டு ஆட்சியை சீர்குலைத்துவிட்டார் என்று நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, ''முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீரழித்துவிட்டது.

மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியாகாந்தி தலையிட்டு ஆட்சியை சீர்குலைத்துவிட்டார். அரசியலில் என்னை வீழ்த்த எதிரிகள் தீட்டிய சதித் திட்டங்கள் தோற்றுப் போய்விட்டது. எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பரஸ்பரம் செய்து கொள்ளும் விமர்சனங்கள், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்படும் நாடகம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியில் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரசை இந்த முறை சி.பி.ஐ.யால்கூட காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு குடும்பத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் லக்னோவில் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொண்டாலும், டெல்லியில் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300 இடங்களைக் கொடுத்தால் நாட்டில் மாற்றத்த ஏற்படுத்துவேன். 300க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்று பா.ஜனதா அதிகாரத்துக்கு வந்தால், நிலையான மற்றும் வலுவான அரசு அமைவதை உறுதி செய்வோம்.

நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. நட்சத்திரங்களை உங்களுக்கு கொண்டு வருவேன் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்க மாட்டேன். உங்கள் நிலைமைகளை மேம்படுத்தவே விரும்புகிறேன்" என்றார்.