Published:Updated:

அறிவாலயத்தில் கருணாநிதிக்கு காது குத்துகின்றனர்: மு.க.அழகிரி ஆவேசம்!

Vikatan Correspondent
அறிவாலயத்தில் கருணாநிதிக்கு காது குத்துகின்றனர்: மு.க.அழகிரி ஆவேசம்!
அறிவாலயத்தில் கருணாநிதிக்கு காது குத்துகின்றனர்: மு.க.அழகிரி ஆவேசம்!
அறிவாலயத்தில் கருணாநிதிக்கு காது குத்துகின்றனர்: மு.க.அழகிரி ஆவேசம்!

மதுரை: அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து காதுகுத்தி வருகின்றனர் என்று காரியாபட்டி அருகே நடைபெற்ற விழாவில் மு.க.அழகிரி ஆவேசமாக கூறினார்.

காரியாபட்டி அருகேயுள்ள கல்குறிச்சியில் கணக்கனேந்தல் தி.மு.க. கிளை செயலாளர் கருப்பசாமி மகன் காதணி விழாவில் கலந்து கொண்டு மு.க.அழகிரி பேசும்போது, ''தி.மு.க.வுக்காக உழைத்தவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தி.மு.க.வில் உறுப்பினரே இல்லாத முகம்மது ஜலீலிடம் பணம் வாங்கி கொண்டு ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

முகம்மது ஜலீல், கொடிகாத்த குமரனா?, கட்சிக்காக ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம் நடத்தி சிறை சென்றாரா?. இவர்களுக்கு பாடம் புகட்ட முகம்மது ஜலீலை தோல்வியடைய செய்ய வேண்டும்.

காரியாபட்டி பகுதிக்கு வரும் போதெல்லாம் எனது நண்பர் தங்கபாண்டியன் சமாதிக்கு செல்வது வழக்கம். இந்த முறை செல்ல இயலாத அளவுக்கு எங்களை பிரித்துவிட்டனர். நான் இங்கு காது குத்து விழாவுக்கு வந்துள்ளேன். ஆனால், அங்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து காதுகுத்தி வருகின்றனர்" என்றார் ஆவேசமாக.