Published:Updated:

விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!

Vikatan Correspondent
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் நடந்த பல்வேறு விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''14.2.2014 அன்று சென்னை, காமராஜர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகன் தினேஷ்குமார், யானைகவுனி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரின் மனைவி மீனா ஜெயின்; 16.2.2014 அன்று விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், குஞ்சரம் பகுதி அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மனைவி அற்புதசெல்வி; ஆகியோர் அரசுப் பேருந்துகள் மோதியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிராமத்தைச் சேர்ந்த சேமான் என்பவரின் மகன் நாச்சிமுத்து 15.2.2014 அன்று காங்கயம்-தாராபுரம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மின்கம்பி அவர் மீது அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சென்னை, வடபழனி, திருநகர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியின் காவலர் மணி என்பவர் 18.2.2014 அன்று விடுதி வளாகத்தில் உள்ள மின்மோட்டாரை சரி செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.