நாசரேத் விஜய், கோவை-6.

தி.மு.க-வின் இப்போதைய ஈழச் செயல்பாடுகள், பிராயச்சித்தமாக இருக்குமா?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். தமிழகத்தில் ஈழப் பிரச்னை தவிர்க்க முடியாதது என்பதையே தி.மு.க-வின் செயல்பாடுகள் மெய்ப்பிக்கின்றன. ஆளும் கட்சியாக இருக்கும்போது வேப்பெண்ணெயாகக் கசந்தது, எதிர்க் கட்சியான பிறகு நெய்யாக மணக்கிறது.

லட்சக்கணக்கான மக்களைக் காவு வாங்கிய ஒரு பிரச்னையில், பாராட்டு விழா நடத்தலாமா என்ற கூச்சம்கூட இல்லாமல் மஞ்சள் சால்வைகளை மாறிமாறிப் போர்த்திக்கொள்வதுதான் சகிக்கவே முடியாதது!

ரேவதிப்ரியன், ஈரோடு-2.

திராவிடக் கட்சிகள் பற்றி அனல் பறக்கப் பேசியுள்ளாரே பாரதிராஜா?

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பக்கத்தில் நின்று மரியாதை செய்தபோது, பாரதிராஜாவுக்கு திராவிடக் கட்சிகளைத் தெரியாதா?

'வேதம் புதிது’ படத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியபோது, அவர் சென்ற இடம் திராவிடர் கழகத்தின் அலுவலகம். அவருக்குப் புரட்சிக்கவிஞர் நினைவு விருதை திராவிடர் கழகம் தரும்போது இது தெரியாதா? பொத்தாம்பொதுவாக அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை விமர்சிப்பது சினிமாக்காரர்கள் சிலரின் பொழுதுபோக்கு. பட வேலைகள் இல்லாத நேரத்தில், இப்படிப்பட்ட முத்துக்களை உதிர்ப்பார்கள். மற்றபடி, அவர்களின் உள்ளார்ந்த அக்கறையைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

மாயாவதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டதே?

தள்ளுபடி ஆகும் அளவுக்கு மனுக்களைத் தயாரிக்கிறதே காங்கிரஸ்? 'மாயாவதியை இவ்வளவு தூரம் காப்பாற்றுபவர்கள், எங்களைக் கைவிடுவது ஏன்?’ என்பதுதான் கருணாநிதியின் எண்ண ஓட்டம். மாயாவதிக்கு விருந்தும் கருணாநிதிக்கு மருந்தும் கொடுப்பதுதான் காங்கிரஸ் நியாயமோ?

சங்கமித்ரா நாகராஜன், கோவை.

அதிகாரம் இருப்பவருக்குப் பதவி தேவைஇல்லை என்று சோனியாவும், பதவியில் இருப்பவருக்கு அதிகாரம் தேவை இல்லை என்று மன்மோகன் சிங்கும் நிரூபித்து விட் டார்களே?

இந்தியாவின் இன்றைய யதார்த்தம் குறித்த சரியான விமர்சனம். இதற்கு விளக்கமும் பதிலும் தேவைஇல்லை.

எம்.சிவகுமார், வேதாரண்யம்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற முக்கியத் தலைவர்கள் போகவில்லையே?

ஈழத் தமிழர் நலன் குறித்துப் பேசும் புலம்பெயர் அமைப்புகளில், யார் நம்பிக்கைக்கு உரியவர்கள், எவரிடம் சந்தேகமான செயல்பாடுகள் இருக்கின்றன என்பதைக் கணிப்பதில் தெளிவு இன்னமும் பிறக்கவில்லை. இவர்கள் செல் லாததற்கு இதுவே முதல்காரணம். தி.மு.க. கலந்துகொள்ளும் மாநாட்டுக்குச் செல்லத் தேவைஇல்லை என்பது இரண்டாவது காரணம்.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ஒரு கட்சியில் இருந்து பிரமுகர்கள் தானாக விலகுவது, கட்சியே விலக்குவது... என்ன வேறுபாடு?

குஞ்சு பெரிதாவதால் முட்டை ஓடு உடைகிறதா? அல்லது முட்டையின் ஓட்டை குஞ்சு உடைக்கிறதா என்பதுபோன்ற கேள்வி. இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தானாக கட்சியில் இருந்து விலகினாலும், விலகும் சூழ்நிலை முக்கியமல்லவா?

சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியலில் உங்களை மலைக்க வைத்தது?

பலரது குணம். சிலரது பணம்!

முன்னது குறைந்துகொண்டே போகிறது. பின்னது ஏறிக்கொண்டே செல்கிறது.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவு இடுவதும், ஓய்வு நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு பணிநீட்டிப்பு வழங்குதும், பணியில் உள்ள மற்ற அதிகாரிகளிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா?

நிச்சயம் ஏற்படுத்தும். பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் ஓர்அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவர் தவறானவர் என்று 20 ஆண்டுகளாகத் தெரியாதது... கடைசி நிமிடத்தில்தான் தெரிகிறதா? தனது பணிக் காலத்தில் அவர் செய்த எத்தனையோ காரியங்களைக் கண்டும் காணாமல் விட்டவர்களுக்கு என்ன தண்டனை? இதற்குக் கொஞ்சம் குறைவில்லாதது, பணிநீட்டிப்பு. ஓர் அதிகாரிக்கு ஓய்வுக்குப் பிறகும் பணி நீட்டிப்பு தரப்படுகிறது. அவரைப்போல் தகுதியானவர் அடுத்து எவருமே இல்லை என்று அரசாங்கம் நினைக்கிறதா? அவர் இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்காதா?

இரண்டுமே அபத்தம். ஒருவர் பணி ஓய்வு பெறும்போது, 'இவர் திறமையை இன்னும் சில காலத்துக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளலாமே’ என்று மக்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் அளவுக்கு எவர் உண்டு?