Published:Updated:

தலையங்கம் - சிதம்பரப் பாடம்!

தலையங்கம் - சிதம்பரப் பாடம்!

தலையங்கம் - சிதம்பரப் பாடம்!

தலையங்கம் - சிதம்பரப் பாடம்!

Published:Updated:
தலையங்கம் - சிதம்பரப் பாடம்!

மனமுவந்து சமூகத்துக்குத் தரும் கொடையே அளவற்றுச் சேர்த்த செல்வத்துக்கு அழகு என்ற பொது நல மனப்பாங்கின் விளைவாக, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய கல்வி நிலையங்கள் ஏராளம். அப்படித்தான், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரந்த உள்ளத்தோடு, அன்றைய வெள்ளையர் ஆட்சியிடம் 20 லட்ச ரூபாய் நிதியும் 200 ஏக்கர் நிலமும் அளிக்க... கம்பீரமாக உருவானது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.

 அற உணர்வையும் தொலைநோக்குப் பார்வையையும் அஸ்திவாரமாகக்கொண்டு 1929-ல் உருவாகி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி, அண்மைக்காலமாகக் கிளம்பிய புகார்கள் எல்லாம் நெருடல் ரகம். 'கொஞ்சம் பணம் இருந்தால் இங்கே பட்டம் வாங்கலாம்' என்றும்... 'இன்னும் கூடுதலாக இருந்தால் வேலையே வாங்கிவிடலாம்' என்றும்... ஊரறிந்த ரகசியமாக கேலிப் பேச்சு நிலவியது. தரம் நாடும் சில தனியார் நிறுவனங்கள், 'அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமா? அது இங்கே செல்லாது’ என்று நேர்க்காணலின்போது மறுதலித்த சேதியும் காதில் விழுந்தது. அரசோ, மர்ம மௌனம் காத்தது. இப்போது, 'சம்பளம் கொடுக்க நிதி இல்லை. ஆட்குறைப்பை விட்டால் வேறு வழி இல்லை' என்று பல்கலைக்கழகம் ஏறக்குறைய 'திவால்' அறிக்கைவிடுகிறது. அதையடுத்து, 'அரசாங்கமே இந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்த வேண்டும்' என்று ஊழியர் சங்கத் தரப்பில் இருந்து போர் முழக்கம் கேட்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரையில், அரசின் அலட்சியமான அமைதியால் ஆட்டம் கண்டுபோயிருக்கும் கல்விக்கூடங்களின் பட்டியலில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஓர் உதாரணம் மட்டுமே. முதல் போட்டவர்கள் முடிந்த வழிகளில் எல்லாம் 'தேற்றிக்கொள்ளட்டும்’ என்று வேடிக்கை பார்ப்பதற்குக் கல்வி ஒன்றும் கடைத் தெரு வியாபாரம் அல்ல! எந்தவொரு கல்விக்கூடத்திலும் அலட்சியமோ, முறைகேடோ, நிர்வாகச் சீர்கேடோ தலையெடுக்கும்போதே, களை எடுக்கும் பொறுப்பு தன்னிடம் இருப்பதை அரசாங்கம் உணராவிட்டால்... அதைவிடப் பெரிய எதிர்காலக் கேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism