கழுகார் வரும்போது, தி.மு.க. இளைஞர் அணிக் கட்டுரை லே-அவுட் டிசைனில் இருந்தது.

''ம்... இதுவேதான். மிகநீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாநிதியின் மகள் செல்வி, மறைமலை நகர் இளைஞர் அணி கருத்தரங்குக்கு வந்திருந்தார். முன்பெல்லாம் தயாளு, செல்வி, துர்கா ஆகிய மூவரும்தான் முன்வரிசையை அணிவகுப்பார்கள். கொஞ்சம் தள்ளி ராஜாத்தி, கனிமொழி ஆகியோர் அமர்ந்திருப்பார்கள். தயாளு அம்மாளுக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு. அதனால், அவர் அதிகமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. செல்வியும் தனது பெங்களூரு வீட்டில் பெரும்பாலும் தங்கிவிடுகிறார். கோபாலபுரம் இல்லத்தில் இருந்தால் தன்னைக் கவனிக்கவே தனி ஆள் வேண்டும் என்பதால், தயாளுவும் பெங்களூரு சென்று விட்டார். ஸ்டாலினும் அழகிரியும் அவரை அங்கு சென்றுதான் பார்த்து வந்தனர். அதன்பிறகு, சென்னை வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, மதுரைக்குப் போன தயாளு அங்கு இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கி இருந்தார். இப்போது உடல்நலத்தைக் காரணமாகக் காட்டி அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. அதனாலோ என்னவோ செல்வியும் வருவது இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இந்த மாநாட்டுக்கு வந்தது, பலரது புருவத்தை உயர்த்தியது.''

''மேலே சொல்லும்!''

''ஸ்டாலினுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் செல்வியும் துடிப்புடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் அவர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு விஷயம் தி.மு.க. வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது. குஷ்புவை, 'கோபாலபுரத்துக்கு வராதே’ என்று சிலர் தடை போட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். 'குஷ்பு, அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசிக்கொண்டு இருப்பது மீடி யாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரம் வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது. அதனால்தான் இந்தத் தடை’ என்று சொல்கிறார்கள். 'எதுக்குக் கோபாலபுரம் வருகிறாய்?’ என்று குஷ்புவிடமே சிலர் சண்டை போட்டதாகவும் சொல்கிறார்கள். 'செல்விதான் அப்படிக் கோபித்துக் கொண்டார்’ என்று சிலரும், 'அவர் இல்லை’ என்று சிலரும் சொல்கிறார்கள். பொதுவாகவே கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருடன் குஷ்பு தன்னை புரமோட் செய்து கொள்வதை அந்தக் குடும்பத்தினர் யாருமே விரும்பவில்லையாம். 'என்னை யாரும் மிரட்டவில்லை. நான் அனைவரிடமும் சகஜமாகத்தான் பழகுகிறேன். செல்வியுடனும் தினமும் பேசுவேன். ஆனால் யாரோ இப்படிக் கிளப்பி விடுகிறார்கள்’ என்று குஷ்பு பலரிடமும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.''

''ஓஹோ!''

''இன்னொரு விவகாரமும் சொல்கிறேன். டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் அதிகம் இடம் கொடுப்பதாக, அவரது வட்டாரத்தில் வருத்த ரேகைகள் படர ஆரம்பித்து உள்ளன''

''ஸ்டாலினின் எண்ண ஓட்டம் என்னவாம்?''

''அவருக்கு டெல்லி லாபி செய்வதற்கு ஒருவர் தேவை. கனிமொழி அல்லது தயாநிதி மாறனை உடன் வைத்துக்கொள்வதற்கு ஏதோ ஒரு ஈகோ தடுக்கிறது. அதனால், டி.ஆர்.பாலுவை பயன்படுத்திக் கொள்கிறார்.''

''ராஜாத்தி அம்மாள் குடும்பத்துடன்தானே பாலு நெருக்கமாக இருந்தார்!''

''அது அந்தக் காலம்! இப்போது அவர் அந்தப் பக்கமே வருவது இல்லையாம்!''

''ஆதாயம் கிடைக்கும் இடத்துக்குத்தானே அரசியலில் ஈர்ப்பு அதிகம். சி.ஐ.டி. காலனி பக்கமாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் தென்படுவது இல்லை. அவரும் இப்போது ஸ்டாலின் பக்கம்தான் வலம் வருகிறார். இதுதான் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது'' என்ற கழுகார், திடீர் ஞாபகம் வந்தவராக,

''கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டையில் ஒரு கூட்டம். இன்னாள் மாவட்டச் செயலாளர் அரசுவின் தந்தையான பெரியண்ணன் நினைவுப் பொதுக்கூட்டம் அது. அதில், காங்கிரஸ் கட்சியை பாலு காய்ச்சி எடுத்து விட்டதாக ஒரு தாக்கீது டெல்லிக்குப் போயிருக்கிறது.''

''அது என்ன?''

''ஈழப் பிரச்னை தொடர்பாக ஐ.நா. வரை சென்று வந்த விஷயங்களை விலாவாரியாகச் சொன்னாராம் பாலு. ஈழ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப் போகிறாராம். அதைச் சொல்லி விட்டு, 'இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இந்திய அரசாங்கம் சந்திக்க வேண்டியது வேறு விதமாக இருக்கும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இது என்னுடைய இனப்பிரச்னை. எங்களது மொழிக்கு ஊறு ஏற்படும்போது ஏனோதானோ என உட்கார்ந்துகொண்டு இருந்தால்... இதைப்பற்றி சிந்திக்காமல், கவலைப்படாமல் இருந்தால், உங்களைக் கவலைப்பட வைக்கவேண்டிய நேரம் வரும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதாரண டி.ஆர்.பாலுவுக்கு மட்டும் அல்ல. அன்புத்தலைவர் கலைஞர் அவர்களின் கடைசித் தொண்டனின் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். இதுவரை பொறுத்தது போதும். பொங்கி எழுவோம்’ என்று சீறினாராம்.''

''ஆச்சர்யமாக இருக்கிறதே?''

''தி.மு.க. வட்டாரத்தில் ஒரு கிண்டல் உண்டு. 'பாலு, தி.மு.க-வை விட காங்கிரஸுக்கு விசுவாசமாக இருப்பார்’ என்று. அதையும் மீறி பாலு இப்படிப் பேசியது பலருக்கும் ஆச்சர்யம்தான். தி.மு.க-வின் இத்தகைய திடீர் வீறாப்பு பற்றி டெல்லியில் பேச்சு வந்ததாம். 'தி.மு.க. நம்முடைய கூட்டணியை விட்டு விலகினால் என்ன ஆகும்?’ என்று ஒரு தலைவர் கேட்க, 'எங்கேயும் போக மாட்டாங்க? போறதுக்கு எங்கேயும் இடம் இல்லை’என்று கமென்ட் அடித்தாராம், மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கும் மனிதர் ஒருவர்!'' என்றபடி சப்ஜெக்ட் மாறினார் கழுகார்.

''கடந்த 17-ம் தேதி மத்திய உளவுப்பிரிவில் இருந்து தமிழக உளவுப்பிரிவுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த பாதுகாப்புக்கான காரணம் பகீர் ரகம்.

'இலங்கையில், இம்ப்ரஸிவ் எக்ஸ்ப்ளோஸிவ் டிவைஸ் எனப்படும் மிதவையைத் தயாரித்துள்ளனர். அந்த மிதவையில் முழுக்க முழுக்க வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு உள்ளன. அந்த மிதவையை இந்தியக் கடல் பகுதியில் மிதக்கவிட்டு உள்ளனர். அந்தப் பொருளைத் தொட்டாலே வெடிக்கும். ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும் அதை வெடிக்கச் செய்யலாம். அதை உடனடியாகக் கண்டுபிடியுங்கள்’ என்பதுதான் அந்த உத்தரவாம். இந்தத்தகவல் தமிழக உளவுப்பிரிவுக்குக் கிடைத்ததும், கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும ரோந்துப் பணி தொடங்கியது. அதோடு கடலோரச் சாலை முழுவதிலும் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்தினர். 17-ம் தேதி முதல் 19-ம் தேதிக்குள் வெடிக்கலாம் என்றதாம் அந்தத் தகவல். 19-ம் தேதி மாலை வரை எந்த அசம்பாவிதமும் நடக்காததால் பெருமூச்சு விட்டதாம் தமிழகக் காவல்துறை.''

''இப்படி ஒரு வெடிகுண்டு மிதவைக்கு என்ன தேவை வந்தது?''

''இலங்கைப் பிரச்னையை முன்வைத்து உலக நாடுகள் தங்களது கபடி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. சீனாவின் ஏற்பாட்டில் இந்த மிதவை தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு செய்தியையும் சொல்கிறேன். கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இருக்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர் சென்னை வந்து டேரா போட்டார். ஈழப் பிரச்னை தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் தி.மு.க. கொடுத்த அறிக்கை மீது விசாரணை நடத்த வந்ததாகச் சொல்லப்படுகிறது. வைகோ, வீரமணி, நெடுமாறன், தி.மு.க. வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை அவர் சந்தித்துச் சென்றுள்ளார். அமெரிக்காவும் சீனாவும் உள்ளே புகுந்து புறப்படுவதைப் பார்த்தால் என்ன ஆகுமோ தெரியவில்லை!'' என்ற கழுகாரிடம், 'கிரானைட் மேட்டரில் ஃபாலோ-அப் உண்டா?'' என்று கேட்டோம்.

''கிரானைட் வழக்குகள் சவசவத்துக்கொண்டு இருப்பதாக பரவலாக ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. கிரானைட் விவகாரங்களை வெற்றிகரமாக விசாரித்து முடித்து முடிவுரை எழுதத் துடித்த மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும் எஸ்.பி. பாலகிருஷ்ணனுமே இப்போது அப்செட் என்கிறார்கள். அரசுக்குச் சாதகமாக செயல்பட வேண்டியவர்களே மறைமுகமாக எதிர்த்து வேலை செய்வதாகப் புலம்பல்கள். துரை தயாநிதியை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை 21-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினம் துரை தயாநிதி உள்ளிட்டவர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்கவும் முகாந் திரங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், ஒரு புது ஆலோசனை கிளம்பி உள்ளது.''

''அது என்ன?''

''ஸ்பெக்ட்ரம் வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு போல கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பதிவாகி உள்ள சுமார் 70 வழக்குகளையும் ஒரே கோர்ட்டில் ஒரே நீதிபதியே விசாரித்து தீர்ப்பு எழுதும் விதமாக தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். குளறுபடிகளும் குறுக்கீடுகளும் இல்லாமல் வழக்கைக் கொண்டு செல்லும் வசதிக்காக மூத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்’ என்று விரைவில் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகிறார்கள் கிரானைட் புள்ளிகளை முழுமையாகத் தோலுரிக்கத் துடிக்கும் சில பொதுநல விரும்பிகள். அப்படிச் செய்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் முழுமையான பலன் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.''

''ம்!''

''முதல்வரின் செயலாளர்களாக நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மீது துறை அதிகாரிகளுக்குப் பலமான வருத்தங்கள் எழுந்துள்ளன. 'முதல்வரின் செயலாளர்களுக்கு கோட்டையில் அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவர்கள் எப்போதும் முதல்வருக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். முதல்வர் கோட்டைக்கு வரும் நேரத்தில் மட்டும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், நீண்ட வரிசையில் நின்று அவசரம் அவசரமாகப் பார்க்கிறார்கள். கோட்டையைவிட்டு முதல்வர், போயஸ் தோட்டம் புறப்பட்ட உடன் முதல்வரின் செயலாளர்களும் போயஸ் தோட்டம் போய்விடுகிறார்கள். முதல்வர், சிறுதாவூர் சென்றால் அவர்களும் அங்கே சென்று விடுகிறார்கள். இதனால் துறை செயலாளர்களால், முக்கியப் பிரச்னைகளை முதல்வரின் காதுக்கு உடனுக்குடன் கொண்டுசெல்ல முடியவில்லை. மேலும், முக்கியப் பிரச்னை தொடர்பாக முதல்வரின் செயலாளர்களைப் பார்க்கவேண்டும் என்றால், அது நடக்கிற காரியமாக இல்லை. அரசு உயர் அதிகாரிகளே பார்க்கத் தவம் கிடக்கும்போது, அவ்வளவு லேசில் மற்றவர்கள் பார்த்துவிட முடியுமா என்ன?’ என்றும் கேட்கிறார்கள்'' என்ற தகவலையும் சிந்திவிட்டுப் பறந்தார் கழுகார்!

படம்: எம்.உசேன்