Published:Updated:

பட்டாசு கிட்டங்கி உரிம கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம்!

Vikatan Correspondent

சென்னை: பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டணம் 15 ஆயிரத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டணம் 15 ஆயிரத்தில் இருந்து 4 லட்சமாகவும், போர்மேன் உரிம புதுப்பிப்புக் கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்றும் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

மேலும், பாதுகாப்பில்லாத சீனப் பட்டாசுகளை முறைகேடாக இறக்குமதியாவதை தடுக்கவில்லை என்றும், சீனப் பட்டாசுகள் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.