Published:Updated:

பிரதமரை பலவீனப்படுத்தினார் சோனியா: மன்மோகனின் முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு

Vikatan Correspondent
பிரதமரை பலவீனப்படுத்தினார் சோனியா: மன்மோகனின் முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு
பிரதமரை பலவீனப்படுத்தினார் சோனியா: மன்மோகனின் முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு
பிரதமரை பலவீனப்படுத்தினார் சோனியா: மன்மோகனின் முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு
பிரதமரை பலவீனப்படுத்தினார் சோனியா: மன்மோகனின் முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உத்தரவிடும் அதிகார மையமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செயல்பட்டதாக பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.

2004 முதல் 2009ம் ஆண்டு வரை பிரதமரின் ஊடக ஆலோசகராக பணியாற்றிய சஞ்சயா பரு எழுதியுள்ள "The Accidental Prime Minister - The Making and Unmaking of Manmohan Singh" என்ற புத்தகம் வெளியாகியுள்ளது.

அதில், பிரதமருக்கு இணையான அதிகார மையத்தை உருவாக்கி பிரதமரை சோனியா காந்தி பலவீனப்படுத்திவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, தமது ஆட்சியின் 2வது ஐந்தாண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவிடம் முற்றிலுமாக சரணடைந்துவிட்டதாக சஞ்சயா பரு குறிப்பிட்டுள்ளார்.

பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே கட்சிக்கு முற்றிலுமாக பணியும் போக்கை பிரதமர் மன்மோகன்சிங் கடைபிடித்ததாகவும் சஞ்சயா பரு அதில் தெரிவித்துள்ளார்.

இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அது குழப்பத்தை தந்தது. கட்சித்தலைவர்தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டியதாயிற்று. கட்சிக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிற அதிகாரத்துடன், அரசின் மீதான கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்துக்கொள்வதே சோனியாவின் நோக்கமாக இருந்தது.

 1991-93 காலக்கட்டத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய சி.ரங்கராஜனைத்தான் நிதி அமைச்சராக்க  வேண்டும் எண்ணினார் மன்மோகன்சிங். ஆனால் மன்மோகன் சிங்குடன்  ஆலோசிக்காமலேயே பிரணாப் முகர்ஜியை, சோனியா காந்தி தன் விருப்பப்படி நிதி அமைச்சராக்கினார்.

2-ஜி ஊழல் பெரிதாவுவதற்கு முன் ஆ.ராசாவை அமைச்சரவையில் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்று மன்மோகன் முயற்சித்தார். ஆனால் 24 மணி நேரத்தில், அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து விட்டார். டி.ஆர்.பாலுவையும் அமைச்சரவையில் சேர்ப்பதை மன்மோகன் சிங் எதிர்த்தார். அதில் அவர் நினைத்ததை செய்து காட்டினார் என்றாலும் ஆ.ராசா விஷயத்தில் அது முடியவில்லை என்றும் அந்த புத்தகத்தில் சஞ்சயா பரு மேலும் தெரிவித்துள்ளார்.