Published:Updated:

அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!

Vikatan Correspondent
அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!
அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!
அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!

சையை காதலிக்காதவர்கள் யாரும் கிடையாது. திருவையாற்றில், தியாகராஜர் சமாதியில் 1864-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரையிலும் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரியில் அனைத்து சங்கீத வித்வான்களும் சங்கமித்து, கச்சேரிகள் நடத்துவது தியாகராஜர் ஆராதனை. கிட்டத்தட்ட இதற்கு இணையாக... அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் பகுதியில், கடந்த 37 ஆண்டுகளாக தியாகராஜர் ஆராதனை நடத்தப்பட்டு வருவது... ஆச்சர்ய சங்கதிதானே!

இங்கிருந்து இடம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, இன்று 12 நாட்கள், பல்வேறு கலைஞர்கள், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பார்வையாளர்கள் என்று பெருவிழாவாக மாறியுள்ளது!

அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!

'க்ளீவ்லேண்ட் தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சி’ ஒருங்கிணைப்பாளர்கள், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலுள்ள தேர்ந்த கலைஞர்களை அழைத்துச் சென்று, விழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பிர்ஜு மகராஜ், சுதா ரகுநாதன், நர்த்தகி நட்ராஜ், லால்குடி ஸ்ரீ கிருஷ்னன் மற்றும் லால்குடி ஸ்ரீ விஜயலட்சுமி, டி.வி.கோலாப கிருஷ்ணன் உள்பட பல்வேறு கலைஞர்களுக்கு அழைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 16ல் தொடங்கி 27ஆம் தேதி வரை அமெரிக்க காற்றில் இசையை கலந்து விடப் போகிறார்கள் நம் இசைக் கலைஞர்கள்.

கடந்த எட்டு ஆண்டுகளாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’ நிகழ்வில் பங்கேற்றுவரும் நர்த்தகி நட்ராஜ் பேசும்போது, ''மூன்றாம் இனத்தவரான திருநங்கைகளை, சிகண்டி கதாபாத்திரம் மூலம் மகாபாரதம் போற்றியுள்ளது. பாரதத்தின் அந்த அத்தியாயமான 'பீஷ்மர் சபதம்' எனும் பகுதியை அங்கே அரங்கேற்ற உள்ளேன். இதில் என் நிஜ வாழ்வை ஒத்திருக்கும் உரிமை மறுப்பு, காதல் மறுப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் அம்பை எனும் கதாபாத்திரத்தையும், அங்கே மெருகேற்றப் போகிறேன்'' என்று புன்னகை கலந்து சொன்னார்.

''10 ஆண்டுகளுக்கும் மேலாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’க்கு சென்று வருகிறேன். தொடர்ந்து அந்த

அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!

மேடையில் என்னை உற்சாகப்படுத்தி வரும் கரகோஷங்களைப் பெருமையாக நினைக்கிறேன்'' என்று ஆரம்பித்த, சுதா ரகுநாதன், ''திருவையாறு ஆராதனைக்கு வருவது போலவே... அங்குள்ள சிகாகோ, சாண்டியாகோ, நியூயார்க் முதலிய நகரங்களிலிருந்து கார், விமானம் என்று ரசிகர்கள் வந்து குவிவார்கள். சென்னையில் மாதத்துக்கு மூன்று முறை நடக்கும் கச்சேரிகள், அங்கு ஆண்டுக்கு ஒருமுறைதான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடுவதில்லை. பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாகும் வகையில் திட்டமிட்டு அட்டவணை தயாரிப்பது வரை அனைத்தையும் சிரத்தையோடு செய்யும் விழாக் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்'' என்றார் சந்தோஷத்துடன்!

இந்த நிகழ்ச்சிக்கு பால முரளி கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியை அலங்கரிக்கிறார்.  நாட்டியம் சேர்ந்த நாடகத்தில் மகாபாரத்தினை ஐந்து பாகமாக வெவ்வேறு குழுக் கலைஞர்கள் அரங்கேற்ற இருக்கின்றனர். 500க்கும் மேல் சிறார்கள் பங்கேற்க்கும் பாட்டுப் போட்டி, இசை நிக்ழ்ச்சிகள் மேலும், கிளைவ் லாண்ட் பல்கழைக்கழகமும்  கர்நாடக இசைக்குழுவும் இணைந்து நடத்தும் “ஜாஸ் குரூப்” டான்ஸ் பர்ஃபாமன்ஸ் போன்றவை அரங்கேற இருக்கிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் வருடம் தோறும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருப்பது நிகழ்வின் சிறப்பிற்கு ஒரு சான்று.

அமெரிக்காவில் கலைகளின் சங்கமம்: க்ளீவ்லேண்ட் ஆராதனை!

இந்தியா மற்றும் அமெரிக்கா அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமாணத்தினை இந்திய தொண்டு நிறுவனத்திற்கே கொடுத்து உதவவும் இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். மேலும் அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கு இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கைமுறை, அதன் சிறப்பினை தெரிந்து கொள்ளவும் செய்வது தனிச் சிறப்பு. ஃபாரினிலும் நம் பாரம்பரியத்துக்கு வெற்றிதான்!


மேலும் இது குறித்த தகவலுக்கு இங்கே கிளிக் செய்க!http://www.aradhana.org/