Published:Updated:

எலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்

Vikatan Correspondent
எலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்
எலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்
எலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்

நெல்லை: பாரதிய ஜனதா கூட்டணியில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் வாசன், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, எலியும், தவளையும் ஒன்று சேர்ந்தது போன்ற கூட்டணி என கிண்டல் அடித்துள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், தனி ஈழம் குறி்த்தும், மீனவர்கள் பிரச்னை குறித்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் இதனை வலியுறுத்தி இருப்பது முரண்பாடாக இருக்கிறது என்றார்.

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் அ.தி.மு.க அரசு தாமதப்படுத்தப்படுகிறது என்றும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசிடம் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமாக தொடங்க தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று கூறிய வாசன், கூடங்குளத்திலிருந்து அதிக மின்சாரம் தமிழகத்திற்கு தான் ஒதுக்கப்படுகிறது என்றும், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் தமிழக மின்தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலை அமைக்க  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் வாசன் கூறினார்.