Published:Updated:

மோடி குறித்து கருணாநிதி காலத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார்: பா.ஜனதா

Vikatan Correspondent
மோடி குறித்து கருணாநிதி காலத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார்: பா.ஜனதா
மோடி குறித்து கருணாநிதி காலத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார்: பா.ஜனதா
மோடி குறித்து கருணாநிதி காலத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார்: பா.ஜனதா

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி, மோடி குறித்து காலத்திற்கேற்றபடி பேசி வருகிறார் என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலை யுத்தமாக பா.ஜ.க. நினைக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்து காங்கிரசை அகற்றுவதுதான் எங்கள் கட்சியின் குறிக்கோள். தற்போது நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. அந்த அலையில் காங்கிரஸ் காணாமல் போய்விடும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை. ப.சிதம்பரம் பேட்டி கொடுப்பதில்தான் வல்லவர். அவருக்கு தைரியம் இருந்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலில் நரேந்திர மோடி எனது நெருங்கிய நண்பர் என்றார். தற்போது அவர் காலத்துக்கு ஏற்றவாறு பேசி வருகிறார்.