Published:Updated:

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து
மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அறத்தையும், அகிம்சையையும் வலியுறுத்தும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் கொல்லாமையும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை உலகிற்கு  விளக்கி, அகிம்சை நெறியை தனது வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி, அதன் மாண்பை உலகிற்குப் பறைசாற்றியவர்.

உண்மையையே பேசுதல், வன்முறையைத் தவிர்த்தல், எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், பற்றற்றிருத்தல் போன்ற பகவான் மகாவீரர் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைபிடித்து உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட முற்பட வேண்டும்.

பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு