Published:Updated:

மன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்!

Vikatan Correspondent
மன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்!
மன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்!
மன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்!

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உதவியாளராக இருந்த சஞ்ஜெய பாரு எழுதியுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜெய பாரு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி ‘விபத்தாக வந்த பிரதமர்- மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது’ ( The Accidental Prime Minister - The Making and Unmaking Of Manmohan Singh,) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில், "மன்மோகன்சிங் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லைப் பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார், முக்கிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திலும், பிரதமர் அலுவலக நியமனத்திலும் சோனியா காந்திதான் முடிவுகளை எடுத்தார், மன்மோகன் சிங் சோனியா காந்தியிடமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் சரணாகதி அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது" என குறிப்பிட்டு உள்ளார்

இந்த புத்தகம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், புத்தகத்தில் மன்மோகன் குறித்து இடம்பெற்றுள்ள தகவல்கள் அவரது இமேஜை மேலும் காலி செய்வதாக உள்ளது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வணிக லாபத்திற்காக உயர் பதவியில் உள்ளவரை தங்கள் சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர். முன்னாள் ஆலோசகர் தனது கற்பனையை கலந்து இதில் எழுதியுள்ளார்.

மேலும், பிரதமர் கடந்த ஆண்டு  அக்டோபரில் மூத்த பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசுகையில், சஞ்ஜெய பாரு கூறுவதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்" என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமும், மன்மோகன் சிங் பற்றி சஞ்ஜெய பாரு எழுதியுள்ள கருத்தை நிராகரித்துள்ளர்.

பாருவின் கணிப்பை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கட்சியில் நடக்கும் அரசியல் முடிவுகளை மட்டுமே சோனியா காந்தி எடுத்து வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.