Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:

எஸ்.பி.விவேக், சேலம்.

கழுகார் பதில்கள்!

நடிகர் கமல், முதல்வரைச் சந்தித்து உள்ளாரே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

ஆட்சி மாறும்போதெல்லாம் 'விஸ்வரூபம்’ எடுப்பவர்தானே!

 அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

தே.மு.தி.க - காங்கிரஸ் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடக்கிறதாமே?

##~##

இது வழக்கமாக நடப்பதுதான். கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதே அவர்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்னை. இருவருமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதனால்தான் உடன்பாடு காண முடியாமல்போகிறது. அடுத்து வரப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், காங்கிரஸுக்கு விஜயகாந்த் விட்டுக் கொடுக்கலாம் அல்லது இருவரும் சரிசமமாய் பிரித்துக்கொள்ளலாம்.

 ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்!

சர்தார் வல்லபபாய் படேலை எந்தத் தலைவர்களும் நினைவில் வைத்துக்கொள்ளாததற்கு என்ன காரணம்?

அவருடையை வாரிசுகள் அரசியலில் இருந்திருந்​தால், நினைவில் வைத்திருப்பார்கள். ஆனாலும், 'இரும்பு மனிதர்’ என்றால், அது அவர் மட்டும்தான்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'பெண்களும் இளைஞர்களும் அதிக அளவில் அரசிய​லுக்கு வர வேண்டும்’ என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத் துள்ளாரே?

அதில் ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது. 'பணத்துடன் வர வேண்டும்’ என்று ராகுல் சொல்லி இருக்கலாம். இளைஞர் காங்கிரஸ் பொறுப்புக்கு வரவே, பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை உருவானதைத்தான் சமீபத்தில் பார்த்தோமே!

 எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் 68 சதவிகிதமும் கல்லூரிகள் 73 சதவிகிதமும் தரம் குறைந்தவைகளாக உள்ளன’ என்று, மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளது பற்றி?

புள்ளி விவரம் உண்மைதான். ஆனால், அதைச் சீர்படுத்த  என்ன செய்யப்போகிறார்கள் என்பதே முக்கியம். தொழில் அதிபர்கள் தொழில் தொடங்குவதற்கு இணையாக இன்று கல்வி நிறுவனங்களை ஆரம்பித்ததன் விளைவு இது. எத்தனை ஏக்கர் வைத்துள்ளாய், எவ்வளவு பணம் வைத்துள்ளாய் என்பதை அளவுகோலாக வைத்து கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினால், என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் இது.

மற்ற கல்லூரிகளில் தரம் குறைவதால் அறிவு மழுங்​குகிறது. மருத்துவக் கல்லூரியில் தரம் குறைவதால் உயிர் போகிறது. சசிதரூர் போன்றவர்கள் இந்த நிறுவனங்களை சீர்படுத்துவதற்கான திட்டமிடுதல்​களைத் தொடங்க வேண்டும்.

 ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.

கழுகார் பதில்கள்!

அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் நம்நாட்டு மக்களுக்கு தேசிய உணர்வு சிறப்பாக இருப்பதற்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்தமாக ஒருவனிடம் அடிமைப்பட்டுக்​கிடந்து, விடுதலை பெற்ற எல்லா நாடுகளிலும் இத்தகைய தேசிய உணர்வு இருக்கவே செய்யும். வடக்கு - தெற்கு, இந்திக்காரர்கள் - மற்ற மொழியினர், இந்து - முஸ்லீம் ஆகிய மூன்று வேறுபாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருக்குமானால், இந்தத் தேசிய உணர்வு இன்னும் கூடுதலாக இருந்திருக்கும்.

'செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில்

சிந்தனை ஒன்றுடையாள்’ என்று, பாரதி சொன்னது காலப்போக்கில் மங்கிப்போனதற்குக் காரணம் அரசியல்!

 சங்கத்தமிழன், சென்னிவிரம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'ஓர் அரசியல்வாதிக்கு வெற்றி, தோல்வி என்பது தேர்தலில் மட்டும்தான்’ என்று, என் நண்பன் சொல்கிறான் இது உண்மையா?

உண்மைதான். ஓர் அரசியல்வாதியின் வெற்றி, அவன் இறப்புக்குப் பிறகும் எத்தனை ஆண்டுகள் பேசப்படுகிறான், நினைவுகூரப்படுகிறான் என்பதைப் பொறுத்தது.

'இன்று நான் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகிறேன். இந்த அண்ணாதுரை மறைந்து போகலாம். ஆனால் தமிழ்நாடு என்பது, இருக்கும் வரை அண்ணாதுரையும் இருப்பான்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

தேர்தலில் தோற்றவர்கள்தான் அரசியலில் புகழ் பெற்றுள்ளனர். அண்ணாவும் காமராஜரும் சொந்த ஊர் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்கள். ஆனால், அவர்களை வென்றவர்களைத் தேடத்தான் வேண்டும்.

 என்.காளிதாஸ், அண்ணாமலைநகர்.

கழுகார் பதில்கள்!

'நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் காணப்படும் தேக்க நிலைக்கு சி.ஏ.ஜி., ஊடகம், நீதிமன்றங்களே காரணம்’ என்று கபில்சிபல் குற்றம் சாட்டி இருக்கிறாரே?

கொள்கைகளை வகுப்பதற்கா, கொள்ளைகளை வகுப்பதற்கா என்பதை கபில்சிபல் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

ஆட்சிக்கு வந்தவர்களைக் கேள்வி கேட்க எவரும் இருக்கக்கூடாது என்ற நப்பாசையின் வெளிப்பாடு இது. மக்கள் பணம் முறையாகத்தான் செலவு செய்யப்​பட்டுள்ளதா என்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறை கண்காணிக்கிறது. அது வெளிச்சப்படுத்தும் உண்மைகளை, மக்கள் மன்றத்துக்கு ஊடகங்​கள் கொண்டுபோய் சேர்க்கின்றன. இந்த முறைகேடு​களுக்குக் காரணமானவர்களை நீதிமன்றம் கண் காணிக்கிறது, தண்டிக்கிறது. இந்த மூன்றின் செயல்பாடுகளும் முக்கியமானவை. இதை, கபில்சிபல் அலட்சியப்படுத்துகிறார் என்றால் நினைத்ததைச் செய்யமுடியாமல் தடுக்கிறார்களே என்ற ஆத்திரம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

 சி.முருகன், மார்த்தாண்டம்.

கழுகார் பதில்கள்!

தி.மு.க. ஆட்சியே தொடர்ந்து இருந்திருந்தால் மின்வெட்டு எப்படி இருந்திருக்கும்?

இப்படித்தான் இருந்திருக்கும். திடீர் திடீரென உற்பத்தி செய்ய மின்சாரம் என்ன ரசம் சாதமா? தி.மு.க-வால் என்ன செய்திருக்க முடியும்?

மின்வெட்டு குறித்து கருணாநிதி அழகான காரணம் ஒன்றைச் சொல்லி இருப்பார். அது ஒன்றுதான் கூடுதல் பலனாக இருந்திருக்கும்.

 போடி எஸ். சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்!

கவர்னர் ரோசய்யாவுடன் முதல்வர் ஜெயலலிதா சுமுகமான நட்புறவு பாராட்டி வருகிறாரே?

கவர்னர், முதல்வர் ஆகிய இருவரும் ஒற்றுமை​யுடன் நட்புறவு பாராட்டுவது ஒரு மாநில அரசுக்கு நல்ல விஷயம்தான்.

ஆனால், இது சிலரது கண்களை உறுத்துவதையும் சொல்லி ஆக வேண்டும். முக்கியத் தலைவர் ஒருவரை, மத்திய அமைச்சர் ஒருவர் சமீபத்தில் சந்தித்துப் பேசியபோது, கவர்னரின் செயல்பாடு குறித்தும் பேசி இருக்கின்றனர். 'சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை. அதுபற்றி கவர்னர் கவலைப்படவே இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள்தான் அதிகம் நடக்கிறது. அது பற்றியும் கவர்னர் கண்காணிக்கவே இல்லை. மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாகப் பார்க்க வேண்டிய கவர்னர் அது பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறார்’ என்று அந்தத் தலைவர் கவலையுடன் சொன்னாராம். 'இதுபற்றி மேலிடத்தில் சொல்கிறேன்’ என்று அந்த அமைச்சர் வாக்குறுதி கொடுத்தாராம்.

இப்படி மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு கவர்னர், முதல்வர் நட்பு சுமுகமாக இருக்கிறது.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism