Published:Updated:

தமிழகத்தில் நடைபெறும் இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: கருணாநிதி

Vikatan Correspondent
தமிழகத்தில் நடைபெறும் இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: கருணாநிதி
தமிழகத்தில் நடைபெறும் இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: கருணாநிதி
தமிழகத்தில் நடைபெறும் இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: கருணாநிதி

தஞ்சாவூர்: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் தற்போது இருண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த இருண்ட ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை ஜெயலலிதாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

அண்ணாவின் விருப்பப்படி சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. தொடங்கியது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படும் என கூறிய ஜெயலலிதா, வாக்குறுதிக்கு மறாக அந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளார்.

தி.மு.க.வால் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக இருந்தால் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் அதை தி.மு.க. வரவேற்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் வளம் பெரும், வணிகம் பெருகும். மக்களுக்கு தொண்டாற்றவே தி.மு.க. ஜனநாயகப் பணியில் ஈடுபட்டு வருகிறது'' என்றார்.