Published:Updated:

இந்தியாவில் வாரிசு அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்: வருண் காந்தி

விகடன் விமர்சனக்குழு
இந்தியாவில் வாரிசு அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்: வருண் காந்தி
இந்தியாவில் வாரிசு அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்: வருண் காந்தி
இந்தியாவில் வாரிசு அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்: வருண் காந்தி

சுல்தான்பூர்: இந்தியாவில் வாரிசு அரசியலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வேட்பாளர் வருண் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில், பா.ஜ.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் வருண் காந்தி கூறும்போது, ''நான் சஞ்சய் காந்தியின் மகனாக இருந்திருக்காவிட்டால் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

எனினும், இந்தியாவில் வாரிசு அரசியலை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்

என்னுடைய பாதையைப் பற்றி சிலர் பேசுகிறார்கள். நான் சாதாரண இளைஞன். என்னுடைய பாதை ஒன்றும் அவ்வளவு முக்கியம் கிடையாது. நாட்டின் பாதையை எவ்வாறு பலப்படுத்துவது என்பதுதான் முக்கியம்.

பிரச்னைகளின் அடிப்படையில்தான் அரசியல் நடத்த வேண்டும். தனிநபர் தாக்குதல்களின் மூலம் நடத்தக் கூடாது. பிறரை தரம் தாழ்த்திப் பேசுவதன் மூலம் ஒருவர் தனது மரியாதையை உயர்த்திக்கொள்ள முடியாது. எனது அரசியல் மதச்சார்பற்றது; முற்போக்கானது; பிரச்னைகளின் அடிப்படையிலானது. பிறரின் மத உணர்வுகளை நாம் மதிக்காவிட்டால் நாடு முன்னேற்றமடைய முடியாது.

இந்தியாவுக்கு தற்போது ஆற்றல் வாய்ந்த தலைமை தேவைப்படுகிறது. அத்தகைய ஆற்றல், நரேந்திர மோடியிடம் தான் உள்ளது. நாட்டின் கெளரவத்தை தனது கெளரவமாகவும், நாட்டின் போராட்டத்தை தனது போராட்டமாகவும் கருதும் தலைவர் மோடி" என்றார்.