Published:Updated:

திருநங்கைகள் 3வது பாலினம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: திருநங்கைகள் 3வது பாலினம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநங்கைகளை 3வது பாலினமாக அறிவிப்பு, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது எனச் செய்தி வெளி வந்துள்ளது.

இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், 'மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்' என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுகாலமாக குரல் கொடுத்த தி.மு.க.வுக்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோருக்கும், இந்த வழக்கை தொடுத்த லட்சுமிநாராயணன் திரிபாதிக்கும் நம்முடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை தி.மு.க.வின் சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.