Published:Updated:

சோனியா, நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!

விகடன் விமர்சனக்குழு
சோனியா, நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!
சோனியா, நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!
சோனியா, நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!
சோனியா, நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி வாக்கு சேகரிக்க உள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்றும், நாளையும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில், பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.