Published:Updated:

குழந்தை பராமரிப்புக்காக மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் விடுமுறை!

விகடன் விமர்சனக்குழு
குழந்தை பராமரிப்புக்காக மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் விடுமுறை!
குழந்தை பராமரிப்புக்காக மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் விடுமுறை!
குழந்தை பராமரிப்புக்காக மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் விடுமுறை!

புதுடெல்லி: குழந்தை பராமரிப்புக்காக, மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் தொடர் விடுமுறை அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய அரசு பெண் ஊழியர் ககாலி கோஷ். இவர், தன் குழந்தைகளை பராமரிக்க, தொடர்ச்சியாக 730 நாட்களுக்கு (2 ஆண்டுகள்) விடுமுறை கேட்டார். ஆனால், அவருக்கு விடுமுறை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, கொல்கத்தாவில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதில், விடுமுறை வழங்கக்கூடாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ககாலி கோஷ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ''சுற்றறிக்கைகள் மற்றும் விதி எண் 43 சி-ஐ ஆய்வு செய்தபோது, 18 வயதுக்குட்பட்ட மைனர் குழந்தைகளை வைத்துள்ள மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு, அதிகபட்சம் 730 நாட்கள் வரை தொடர்ச்சியாக விடுமுறை வழங்கலாம் என்று தெளிவாக தெரிகிறது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த விடுமுறை சலுகையை பெறலாம்.

குழந்தை பராமரிப்பு விடுமுறை என்பது, சிறுகுழந்தைகளை வளர்ப்பதற்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளை அவர்களது தேர்வு மற்றும் உடல் நலக்குறைவின்போது பார்த்துக்கொள்வதற்கும் பொருந்தும். அந்த பெண் ஊழியர்களுக்கு, இதர விடுமுறைகளில் நிலுவை இருந்தால், அவற்றையும் இணைத்து, மேற்கண்ட 730 நாட்கள் விடுமுறைக்கு பின்பும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு, 43சி பிரிவின் அடிப்படையிலோ அல்லது மத்திய அரசு பிறப்பித்த விதிமுறைகளின் அடிப்படையிலோ அமையவில்லை. எனவே, அதன் உத்தரவை ரத்து செய்து, மத்திய தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.