Published:Updated:

பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி திட்டவட்டம்!

விகடன் விமர்சனக்குழு
பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி திட்டவட்டம்!
பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி திட்டவட்டம்!
பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம்: கருணாநிதி திட்டவட்டம்!

சென்னை:  பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம் என்று கருணாநிதி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பா.ஜ.க.வுடன் தி.மு.க. 1999 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்ததை முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுகிறார்.

1998 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் மத்திய அரசில் பங்கேற்ற ஜெயலலிதா, தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். அது நடைபெறாத நிலையில், பாரதிய ஜனதாவுக்கான ஆதரவை திடீரென்று அ.தி.மு.க. விலக்கிக் கொண்டது.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்த பிறகு 1999 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். அப்போது, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து சகோதர, சகோதரிகளுடனும் நேசக்கரம் நீட்டுவோம் என்று உறுதிமொழி பெற்ற பிறகே பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம்.

ஆனால், தி.மு.க.வின் கொள்கைக்கு மாறாக பா.ஜனதா கூட்டணி செயல்பட தொடங்கியபோது அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.

தற்போதைய நிலையில், பா.ஜ.க. அணியில் மீண்டும் சேர மாட்டோம். மதசார்பற்ற ஒரு அரசு மத்தியில் அமர்வது தான் எங்களுடைய குறிக்கோள் என்று கூறி வருகிறோம். இதில் இருந்தே தி.மு.க.வின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.