Published:Updated:

இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அதிகமாக செய்துள்ளது: கன்னியாகுமரியில் சோனியா பிரசாரம்

இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அதிகமாக செய்துள்ளது: கன்னியாகுமரியில் சோனியா பிரசாரம்
இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அதிகமாக செய்துள்ளது: கன்னியாகுமரியில் சோனியா பிரசாரம்

கன்னியாகுமரி: இலங்கைத் தமிழர்களுக்காக எந்தக் கட்சியையும் விட  காங்கிரஸ் கட்சி அதிகமாக செய்துள்ளது என்று கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அதிகமாக செய்துள்ளது: கன்னியாகுமரியில் சோனியா பிரசாரம்

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை தமிழர் நலனுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தினார் என்றும்,  காங்கிரசை விட எந்த கட்சியாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்துள்ளது என்று கூறமுடியுமா? என்றும், இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து உதவிகள் செய்யும் என்றும், இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மற்ற அரசியல் கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என்றும் கூறினார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்,  மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு கால தாமதம் செய்தது என்றும் புகார் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி தனி மனிதர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டிய சோனியா, நரேந்திர மோடியின் கையில் நாடு சென்று விடக் கூடாது என்றும், மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது என்றும் புகார் கூறினார்.

கன்னியாகுமரியில் விமானம் நிலையம், மத்திய பல்கலைக்கழகம் போன்ற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய சோனியா, மக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது என்றும், தேசத்தின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி பெரும் விலை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் அதிகமாக செய்துள்ளது: கன்னியாகுமரியில் சோனியா பிரசாரம்

இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் தங்குவதற்கு வீடுகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும், இளமையான, வலிமையான நிரந்தரமான அரசை காங்கிரஸ் அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டுள்ளனர் என்றும், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்களுக்காக 77 ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வழங்கி உள்ளோம் என்றும், ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் மூலம் ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும், குழந்தைகள், பெண்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் சோனியா காந்தி கூறினார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு என்று தெரிவித்த சோனியா, நிலங்களை கையகப்படுத்துவற்காக நஷ்டஈடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது என்றார்.

படங்கள்: ரா.ராம்குமார்