Published:Updated:

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்

மதுரை: பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''பொருளாதார கொள்கைகளில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவ்விரு கட்சிகளும் அமல்படுத்திய பொருளாதார கொள்கைகள்தான் இன்றைய விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. ஆகவே தான், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றான கொள்கைகளை இடது சாரிகள் வலியுறுத்துகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே அதேப்போன்ற கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றன. பா.ஜ.க. குறித்தும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி குறித்தும், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பற்றியும் இரு கட்சிகளுமே எந்தவித கருத்தையும் கூறவில்லை. பா.ஜ.க.வை ஆதரிக்குமா? இல்லையா என்பதை இரு கட்சிகளுமே விளக்கவேயில்லை. அதனால் தான், இடது சாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மீண்டும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வை புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மேலும் 3 தொகுதிகளில் மதச்சார்பறற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளிக்கிறது. மற்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறது என்பதை மாவட்ட குழு முடிவு செய்யும்" என்றார்.